×
 

பயங்கரவாதிகள் ஏவுதளம் அழிப்பு.. முகாம்கள் தரைமட்டம்.. சொல்லி அடித்த இந்திய ராணுவத்தின் வீடியோ..!

பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகளின் ஏவுதளம் மற்றும் பயங்கரவாதிகளின் முகாம்களை தாக்கி அழித்த காட்சிகளை இந்திய ராணுவம் வெளியிட்டு உள்ளது.

காஷ்மீரின் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து இந்தியா- பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ளது. பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை மட்டுமே குறி வைத்து இந்தியா தாக்கி வருகிறது. ஆனால் பாகிஸ்தான் ராணுவம் இந்தியாவில் பொதுமக்கள் குடியிருக்கும் பகுதிகளை ஏவுகணைகள், டிரோன்கள் மூலம் தாக்கி வருகிறது.அவற்றை வான் பாதுகாப்பு அமைப்புகள் மூலம் தாக்கி இந்திய ராணுவம் அழித்துள்ளது. 

தற்போது பயங்கரவாதிகள் முகாம்களை அழித்தது தொடர்பாக புதிய வீடியோ ஒன்றை இந்திய ராணுவம் வெளியிட்டுள்ளது. ஜம்மு காஷ்மீர் மற்றும் பஞ்சாபின் பல நகரங்களில் பாகிஸ்தானின் ட்ரோன் தாக்குதல் முயற்சிகளுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, இந்திய ராணுவம் பயங்கரவாதிகள் முகாம்களை அழித்தது. இந்த முகாம்கள் கடந்த காலங்களில் இந்திய பொதுமக்கள் மற்றும் பாதுகாப்புப் படையினருக்கு எதிராக பயங்கரவாத தாக்குதல்களை திட்டமிடும் மையமாக இருந்தன. 

இதையும் படிங்க: போருக்கு தயாராகிறதா பாக்.? எல்லையில் வீரர்கள் குவிப்பு.. இந்தியாவின் பதில் என்ன?

இந்திய ராணுவத்தின் நடவடிக்கை பயங்கரவாதிகளுக்கு பலத்த அடியைக் கொடுத்துள்ளது என வீடியோவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே போல பஞ்சாபில் ஆயுதங்களை சுமந்து கொண்டு வந்த பாகிஸ்தான் டிரோனை சுட்டு வீழ்த்திய காட்சிகளும் இந்திய ராணுவம் தரப்பில் வெளியிடப்பட்டுள்ளது. இந்திய மக்கள் வசிக்கும் பகுதிகளை டிரோன்களை கொண்டு தாக்கும் பாகிஸ்தானின் முயற்சிகள் அனைத்தும் முறியடிக்கப்பட்டுள்ளது. 

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் அருகே ஆயுதங்களுடன் பறந்து வந்த பாகிஸ்தானின் டிரோன் சுட்டு வீழ்த்தப்பட்டது.இந்திய மக்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் பாகிஸ்தானின் அப்பட்டமான முயற்சியை ஏற்றுக்கொள்ள முடியாது. ஆளில்லா விமானங்கள் மூலம் தாக்கும் எதிரிகளின் திட்டங்களை முறியடிப்போம் என ராணுவம் தெரிவித்துள்ளது. 

இதேபோல இந்தியா– பாகிஸ்தான் எல்லையில், ஜம்முவின், அக்னூர் பகுதில் உள்ள எல்லை பாதுகாப்பு படை நிலைகள் மீது பாகிஸ்தான் ராணுவம் திடீர் தாக்குதல் நடத்தியது. அக்னூர் பகுதிக்கு எதிரே பாகிஸ்தானில் உள்ள சியால்கோட்டில் இருந்து இந்த தாக்குதல் வந்தது. நமது எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் பதிலடி கொடுத்தனர்.  இந்த தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவ நிலைக்கும் அதன் சொத்துகளுக்கும் பலத்த சேதம் ஏற்பட்டது.இதே போல் சியால்கோட், லூனியில்  இருந்த பயங்கரவாதிகளின் ஏவுதளமும், நமது எல்லை பாதுகாப்பு படையின் தாக்குதலில் தகர்க்கப்பட்டது. இந்திய எல்லைக்குள் ஊடுருவுதல்  மற்றும் எல்லை தாண்டி தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் இந்த தளத்தை தான் பயன்படுத்தி வந்தனர். 

இதையும் படிங்க: ராணுவ தளபதிக்கு கூடுதல் பவர்.. இனி ஒருத்தன் வாலாட்டக்கூடாது! ஆப்ரேஷன் சிந்தூர் 2.0 அதிரடி அப்டேட்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share