×
 

போருக்கு தயாராகிறதா பாக்.? எல்லையில் வீரர்கள் குவிப்பு.. இந்தியாவின் பதில் என்ன?

இந்தியா - பாகிஸ்தான் இடையில் போர் பதற்றம அதிகரித்துள்ள நிலையில் எல்லையில் பாகிஸ்தான் அதிக அளவிலான வீரர்களை குவித்து வருகிறது.

ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் இறந்தனர். இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை இந்தியா கையில் எடுத்தது. பாகிஸ்தானில் புகுந்து பயங்கரவாதிகளின் 9 முகாம்களை குறிவைத்து தகர்த்தது. 100 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.அடாவடித்தனமாக இதற்கும் பதிலடி கொடுக்கிறோம் என்ற பெயரில் இந்தியாவை தாக்க ஆரம்பித்தது பாகிஸ்தான். மூன்று நாட்களாக காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களை குறி வைத்து போர் விமானம், ட்ரோன், ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்த தாக்குதலை எல்லாம் இந்தியா வெற்றிகரமாக முறியடித்து விட்டது. ஆனாலும் பாகிஸ்தான் பின்வாங்காமல் தாக்குதலை தொடர்கிறது. அதோடு நம் எல்லை பகுதிகளை நோக்கி படைகளை அனுப்பி வைத்துள்ளது. கொத்து கொத்தாக எல்லையை நோக்கி பாகிஸ்தான் ராணுவம் நகர்ந்து வருகிறது. இதனால் மிகப்பெரிய போர் வெடிக்கும் அபாயம் தொற்றி இருக்கிறது.கடைசியாக 1999ல் கார்கில் போர் நடந்த போது தான் இப்படி எல்லை பகுதிக்கு படைகளை அனுப்பியது பாகிஸ்தான்.

இதையும் படிங்க: குறுக்கு புத்தியை காட்டும் பாக்., இரவோடு இரவாக போட்ட சதித்திட்டம்.. பஞ்சாப் மக்களுக்கு அச்சுறுத்தல்..!

26 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் அதே மாதிரியான சம்பவம் எல்லையில் அரங்கேறி வருகிறது. ஏற்கனவே பொருளாதாரத்தில் அடிவாங்கி கிடக்கும் பாகிஸ்தான், அடாவடித்தனமாக இந்தியாவுடன் மிகப்பெரிய போரில் ஈடுபடும் எண்ணத்துடன் செயல்படுவது இதன் மூலம் தெரியவந்துள்ளது. இந்தியாவை பொறுத்தவரை பயங்கரவாத தாக்குதலுக்கு நாம் பதிலடி கொடுத்தோம். அதோடு முடிந்து விட்டது. ஆனால் பாகிஸ்தான் வேண்டுமென்றே தாக்குதல் நடத்துகிறது. அதற்கு ராணுவமும் உரிய பதிலடி கொடுக்கிறது.

மேற்கொண்டு தாக்குதலை தொடரும் எண்ணம் இந்தியாவுக்கு இல்லை. பாகிஸ்தானுக்கும் அதே எண்ணம் வேண்டும். அதே நேரம் பாகிஸ்தான் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் இந்தியா உறுதியான பதிலடியை கொடுக்கும். எல்லையில் படைகளை குவிக்கும் செயலை பாகிஸ்தான் தொடர்ந்தால், அதற்கு தேவையானதையும் இந்தியா தொடரும் என்று அரசு வட்டாரம் கூறுகிறது.இப்போது நடந்த செய்தியாளர்கள் சந்திப்பின் போது, நம் வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி, விங் கமாண்டர் வியோமிகா சிங், கர்னல் சோபியா குரேஷி இதை உறுதி செய்தனர்.

எல்லையை நோக்கி பாகிஸ்தான் படைகளை அனுப்பி வருகிறது. இதை நாம் உன்னிப்பாக கவனித்து வருகிறோம். இது தாக்குதலை இன்னும் அதிகரிக்கும் நோக்கத்துடன் பாகிஸ்தான் செயல்படுவதை காட்டுகிறது. நம் ராணுவமும் எல்லா நடவடிக்கைக்கும் தயாராக உள்ளன. என்று கூறினர். எல்லை பகுதியில் ராணுவத்தை பாகிஸ்தான் அதிக அளவில் குவித்து வருகிறது. இந்திய ஆயுதப்படைகள் அச்சுறுத்தல்களை வெற்றிகரமாக முறியடித்துள்ளன.

பொதுமக்களின் உட்கட்டமைப்புகளை சிதைப்பது தான் பாகிஸ்தானின் நோக்கம். பாகிஸ்தான் இன்று அதிகாலை அதிவேக ஏவுகணைகளை கொண்டு பஞ்சாப் விமானப்படை தளத்தை தாக்க முயன்றது. மதத் தலத்தில் இந்தியா ஏவுகணைகள் வீசியதாக பாகிஸ்தான் கூறுவது அபத்தமானது என்று, தெரிவித்தார்.

இதையும் படிங்க: வரும் 15ம் தேதி வரை 32 விமான நிலையங்கள் மூடல்.. எங்கெல்லாம் விமான சேவை பாதிக்கும் தெரியுமா?

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share