×
 

‘ஆப்ரேஷன் சிந்தூர்’ குறித்து விமர்சனம்.. அசோகா பல்கலை. பேராசிரிசியர் அதிரடி கைது..!

‘ஆப்ரேஷன் சிந்தூர்’ குறித்து விமர்சித்த அசோகா பல்கலைக்கழக பேராசிரிசியர் கைது செய்யப்பட்டார்.

பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய ராணுவம் எடுத்த ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து விமர்சித்த அசோகா பல்கலைக்கழக பேராசிரியர் அலி கான் மெஹ்முதாபாத்தை ஹரியானா போலீஸார் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து கைது செய்தனர். ஆப்ரேஷன் சிந்தூர் குறித்து அவதூறாக விமர்சித்து, முகநூலில் பதிவிட்டதற்காக அலி கான் கைது செய்யப்பட்டுள்ளார்.

அலி கான் வழக்கறிஞர்கள் கபில் பல்யான் தி இந்து (ஆங்கிலம்) நாளேட்டுக்கு தொலைப்பேசி வாயிலாக அளித்த பேட்டியில் “நாட்டின் இறையாண்மைக்கும், ஒருமைப்பாட்டுக்கும், இரு குழுக்குக்கு விரோதத்தை ஏற்படுத்தும் விதத்திலும்  ஆபத்து விளைவிக்கும் வகையில் செயல்பட்டதாகவும், கூறி பாரதிய நியாய சன்ஹிதா சட்டத்தில் அலிகான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ஆப்ரேஷன் சிந்தூர் குறித்து பாகிஸ்தானுக்கு தகவலா? குற்றம்சாட்டும் ராகுல் காந்தி.. வெளியுறவுத்துறை விளக்கம்..!

உள்ளூர் கிராமத்தலைவர் அளித்த புகாரின் அடிப்படையில் அலிகான் மீது முதல்தகவல் அறிக்கையை போலீஸார் பதிவு செய்துள்ளனர். கான் மீதான குற்றச்சாட்டுகள் அற்பமானவை. இவர் கூறிய இதே கருத்தை பல அரசியல் தலைவர்களும் ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரிகளும் சமூக ஊடகங்களில் தெரிவித்தனர்” எனத் தெரிவித்தார்.

இதற்கிடையே கடந்த 12ம் தேதி ஹரியானா மாநில மகளிர் ஆணையம் சார்பில் கான் அலிகான் நேரில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டது. ஆப்ரேஷன் சிந்தூர் குறித்து ஊடகங்களுக்கு விளக்கம் அளித்த பெண் ராணுவ அதிகாரி கர்னல் சோபியா குரேஷி மற்றும் விங் கமாண்டர் வியோமிகா சிங் ஆகியோர் ராணுவ சீருடை இருந்தபோது அவர்கள் குறித்தும், பெண்கள் குறித்தும் இழிவாகப் பேசியிருந்தார். 

மேலும், ராணுவ உயர் அதிகாரிகளின் பங்களிப்பை குறைத்து மதிப்பிடுதல் மற்றும் இனப்படுகொலை, மனிதநேயமின்மை மற்றும் பாசாங்குத்தனம் என்று தொடர்ந்து கூறி உண்மைகளை தவறாக சித்தரித்து அலிகான் பேசியிருந்தார். இது இந்திய அரசுக்கு  தீங்கிழைக்கும் நோக்கத்தோடு இருந்ததாகக் கூறி சம்மன் அனுப்பப்பட்டிருந்தது.

அது மட்டுமல்லாமல் கடந்த 14ம்தேதி அலி கான் வெளிப்படையாகவே தனது கருத்துக்கள் நியாயமானவை என்று வாதிட்டார். அதில் “அமைதி மற்றும் நல்லிணக்கத்தை மேம்படுத்தவும், ராணுவத்தின் உறுதியான நடவடிக்கையைப் பாராட்டவும் அடிப்படை உரிமை, பேச்சு சுதந்திர உரிமையைப் பயன்படுத்தினேன். மகளிர் ஆணையம், அதன் அதிகார வரம்பை மீறி, எனது பதிவுகளை தவறாகப் படித்து தவறாகப் புரிந்துகொண்டதால், அவற்றின் அர்த்தத்தையே தலைகீழாக மாற்றியுள்ளது. இது புதுவகையான தணிக்கை முறையாகயும், கொடுமைப்படுத்துவதாகவும் இருக்கிறது. என்னுடைய கருத்துக்கள் தவறாக நோக்கம் கொள்ளப்பட்டு, புரிந்து கொள்ளப்பட்டுள்ளது ” எனத் தெரிவித்தார்.

இதற்கிடையே அசோகா பல்கலைக்கழகம் வெளியிட்ட அறிக்கையில் “பேராசிரியர் அலி கான் மெஹ்முதாபாத் போலீஸ் காவலில் எடுக்கப்பட்ட தகவலை அறிந்தோம். இந்த வழக்கின் உண்மை நிலவரங்களைக் கேட்டுள்ளோம். போலீஸாருக்கும், உள்ளூர் நிர்வாகத்துக்கும் தொடர்ந்து பல்கலைக்கழக நிர்வாகம் ஒத்துழைக்கும்” எனத் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: யூடியூபர் ஜோதி மல்ஹோத்ரா ஒரு பாக். உளவாளி..! சதி வேலையை முறியடித்த ஹரியானா போலீஸ்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share