×
 

களைகட்டியது பக்ரீத் கொண்டாட்டம்! இஸ்லாமியர்கள் சிறப்புத் தொழுகை..!

பக்ரீத் பண்டிகையை ஒட்டி நாடு முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.

ரம்ஜான் பண்டிகைக்கு அடுத்து இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகையாக பக்ரீத் உள்ளது. இது ஹஜ் பெருநாள் மற்றும் தியாகத் திருநாள் எனவும் அழைக்கப்படுகிறது. இறைவனின் தூதரான இப்ராஹீமின் தியாகத்தை போற்றும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் இஸ்லாமிய 12-வது மாதமான துல் ஹஜ்ஜின் 10-வது நாளில் பக்ரீத் கொண்டாடப்படுகிறது.

இந்த நிலையில், தியாக பெருநாளா கொண்டாடப்படும் பக்ரீத் பண்டிகை இன்று இஸ்லாமியர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. பக்ரீத் பண்டிகையையொட்டி காலை முதலே இஸ்லாமியர்கள் நாடு முழுவதும் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். பின்னர் ஒருவருக்கு ஒருவர் கட்டித் தழுவி வாழ்த்துகளை பரிமாறி உற்சாகமடைந்தனர்.

இதையும் படிங்க: நாளை 'பக்ரீத் பண்டிகை'.. முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் வாழ்த்து..!

பக்ரீத் பண்டிகையை ஒட்டி திறந்தவெளி மைதானங்கள் மற்றும் மசூதிகளில் சிறப்பு தொழுகைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அங்கு இஸ்லாமியர்கள் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று தொழுகை நடத்தினர்.

இதையும் படிங்க: இறை உணர்வு, சகோதரத்துவம் நல்வாழ்வுக்கு வழிகோலட்டும்! இபிஎஸ் பக்ரீத் வாழ்த்து..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share