×
 

ஸ்ட்ரைக் எதிரொலி.. அவசரப் பணிகளை உடனே முடிங்க..!! இந்தியன் வங்கி அறிவுறுத்தல்!!

செப்டம்பர் 26 நான்காவது சனிக்கிழமை மற்றும் செப்டம்பர் 27 ஞாயிற்றுக்கிழமை ஆகியவை வழக்கமான வங்கி விடுமுறை நாட்கள். 

வாரத்தில் ஐந்து நாட்கள் வேலை என்ற முக்கிய கோரிக்கையுடன், ஓய்வூதிய மேம்பாடு, தேசிய ஓய்வூதியத் திட்டத்திலிருந்து பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கு மாறுவதற்கான விருப்பம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, வங்கி ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பான ஐக்கிய வங்கி தொழிற்சங்கங்கள் (யுனைடெட் ஃபோரம் ஆஃப் பேங்க் யூனியன்ஸ் – யூஎஃப்பிபியூ) செப்டம்பர் 28, 29 மற்றும் 30 ஆகிய மூன்று நாட்களும் நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. 

சமீபத்தில் நடைபெற்ற சமரசப் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததால் இந்தப் போராட்டம் உறுதியாக நடைபெறவுள்ளது எனத் தெரிகிறது. இதன் காரணமாக பொதுத்துறை வங்கிகளின் கிளைகளில் நேரடிச் சேவைகள் பாதிக்கப்படும். செப்டம்பர் 26 நான்காவது சனிக்கிழமை மற்றும் செப்டம்பர் 27 ஞாயிற்றுக்கிழமை ஆகியவை வழக்கமான வங்கி விடுமுறை நாட்கள். 

அதைத் தொடர்ந்து மூன்று நாள் வேலைநிறுத்தம் வருவதால், செப்டம்பர் 26 முதல் 30 வரை தொடர்ச்சியாக ஐந்து நாட்கள் கிளைப் பணிகள் முடங்கும் சூழல் உருவாகியுள்ளது. மேலும், செப்டம்பர் 30 அன்று வங்கிகளின் அரையாண்டு கணக்கு முடிவு நடைபெறும் முக்கிய நாளாகவும் இருப்பதால் பாதிப்பு மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. 

இதையும் படிங்க: அக்டோபர் 6 முதல் நாடு தழுவிய காலவரையற்ற வேலைநிறுத்தம்! வங்கி ஊழியர் சங்கம் எச்சரிக்கை!

இந்தியன் வங்கி உள்ளிட்ட பல்வேறு பொதுத்துறை வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு முன்னெச்சரிக்கை அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளன. காசோலை பரிவர்த்தனைகள், ரொக்கம் டெபாசிட் செய்தல், ஆவண சரிபார்ப்பு, கடன் தொடர்பான பணிகள் போன்ற நேரடிக் கிளைச் சேவைகளில் தாமதம் ஏற்பட வாய்ப்புள்ளதால், அவசர மற்றும் முக்கியமான வங்கிப் பணிகளை செப்டம்பர் 26-ஆம் தேதிக்கு முன்பாகவே முடித்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

வேலைநிறுத்த நாட்களில் சிரமத்தைத் தவிர்க்க மொபைல் பேங்கிங், இணையவழி வங்கிச் சேவை, யுபிஐ செயலிகள், ஏடிஎம் மற்றும் ரொக்கம் செலுத்தும் இயந்திரங்கள் (பிஎன்ஏ) போன்ற டிஜிட்டல் சேவைகளைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. டிஜிட்டல் சேவைகளும் ஏடிஎம் பணப் பரிவர்த்தனைகளும் தடங்கலின்றி இயங்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் வங்கி நிர்வாகங்கள் மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்துள்ளன.

ஏற்கனவே செப்டம்பர் 11 அன்று ஒருநாள் வேலைநிறுத்தம் நடைபெற்ற நிலையில், கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் அக்டோபர் 26 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்திற்குச் செல்லவும் சங்கங்கள் தயார் என அறிவித்துள்ளன. வாடிக்கையாளர்கள் முன்கூட்டியே திட்டமிட்டு டிஜிட்டல் வழிகளைப் பயன்படுத்தி சிரமத்தைத் தவிர்க்குமாறு வங்கிகள் வேண்டுகோள் விடுத்துள்ளன.
 

இதையும் படிங்க: 5 கோரிக்கைகள்.. 11ம் தேதி நாடு தழுவிய ஸ்ட்ரைக்..!! வங்கி ஊழியர்கள் அதிரடி அறிவிப்பு!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share