×
 

நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் நாளை வேலை நிறுத்த போராட்டம்..! சேவைகள் பாதிப்பு அபாயம்..!

நாளை வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் அறிவிப்பு செய்துள்ளதால் வங்கி சேவைகள் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே வேலை செய்யும் முறையை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை இந்திய வங்கி ஊழியர்களிடையே நீண்ட காலமாக எழுப்பப்பட்டு வருகிறது. இந்தக் கோரிக்கை தற்போது மிகவும் தீவிரமடைந்துள்ளது. குறிப்பாக பொதுத்துறை வங்கிகளில் பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் இதற்காக தொடர்ந்து போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்தியாவில் உள்ள பெரும்பாலான வங்கிகளில் தற்போது வாரத்தில் 6 நாட்கள் வேலை நடைமுறையில் உள்ளது. சில சனிக்கிழமைகள் மட்டும் விடுமுறையாக இருந்தாலும், பல வங்கிகளில் மாதத்தின் முதல், மூன்றாவது சனிக்கிழமைகள் முழு நாள் வேலை நாட்களாகவே இருக்கின்றன. இதனால் ஊழியர்கள் வாரத்திற்கு 6 நாட்கள் பணியாற்ற வேண்டிய நிலை உள்ளது.

இந்த நிலைக்கு மாற்றாக வாரத்திற்கு 5 நாட்கள் மட்டுமே வேலை செய்யும் முறையை அறிமுகப்படுத்த வேண்டும் என்று வங்கி ஊழியர்கள் சங்கங்கள் வலியுறுத்தி வருகின்றன. இதனிடையே, வாரத்தில் 5 நாட்கள் வேலை முறைக்கோரி நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் நாளை வேலை நிறுத்தப் போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்து உள்ளனர்.

இதையும் படிங்க: சத்துணவு ஊழியர்கள் ஸ்ட்ரைக்... மாணவர்களை பாதிக்கும்னு கூட உரைக்கலையா? அண்ணாமலை கொந்தளிப்பு..!

இதில், சுமார் 8 லட்சம் ஊழியர்கள் பங்கேற்பார்கள் என்ற எதிர்பார்ப்பால் வங்கி சேவைகள் பெரிதும் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. வார நாட்களில் பணி நேரத்தை நீட்டித்து அனைத்து சனிக்கிழமையும் விடுமுறை தர வேண்டும் என கோரிக்கை வலுத்து வரும் நிலையில், தற்போது மாதத்தின் 2வது, 4வது சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை அளிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: அத்துமீறும் இலங்கை கடற்படை..!! கைதானவர்களை ரிலீஸ் பண்ணுங்க..!! மீனவர்கள் வேலை நிறுத்தம்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share