வீட்டின் முன் கார் நிறுத்த ரூ.25,000 பார்க்கிங் கட்டணம்! பெங்களூருவில் வரப்போகும் புதிய ரூல்ஸ்! ஷாக்கிங் நியூஸ்!
பெங்களூரு நகரில் சாலையோரங்களில் வாகனங்கள் தாறுமாறாக நிறுத்தப்படுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.
பெங்களூருவில் வீட்டின் முன்பாக காரை நிறுத்துவதற்கும் இனி கட்டணம் செலுத்த வேண்டிய நிலை ஏற்படலாம். பொதுச் சாலைகளில் வாகன நிறுத்தத்தை ஒழுங்குபடுத்தும் நோக்கில், வீட்டின் முன் கார்களை நிறுத்த ஆண்டுக்கு ரூ.15,000 முதல் ரூ.25,000 வரை கட்டணம் வசூலிக்கும் திட்டத்தை கிரேட்டர் பெங்களூரு ஆணையம் (GBA) முன்மொழிந்துள்ளது.
பெங்களூரு நகரில் சாலையோரங்களில் வாகனங்கள் தாறுமாறாக நிறுத்தப்படுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது. இதற்கு தீர்வு காணும் வகையில், விதி 13-ன் கீழ் புதிய வாகன நிறுத்த விதிமுறைகள் தொடர்பான வரைவு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி, நகரின் சாலைகள் ‘ஏ’, ‘பி’, ‘சி’ என மூன்று பிரிவுகளாக வகைப்படுத்தப்பட உள்ளன. குறிப்பிட்ட இடங்களில் இருசக்கர வாகனங்கள் மற்றும் ஆட்டோக்களைத் தவிர மற்ற வாகனங்களை இலவசமாக நிறுத்த முடியாத வகையில் கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட உள்ளன.
இதையும் படிங்க: வாகன ஓட்டிகளே உஷார்! சாலையோரம் கார், பைக் நிறுத்தினால் ரூ.25,000 அபாரதமாம்..!!
‘ஏ’ பிரிவு சாலைகளில் கார்களை நிறுத்த ஒரு மணி நேரத்துக்கு ரூ.80, ‘பி’ பிரிவு சாலைகளில் ரூ.60, ‘சி’ பிரிவு சாலைகளில் ரூ.40 என கட்டணம் நிர்ணயிக்க முன்மொழியப்பட்டுள்ளது. இரண்டு மணி நேரத்துக்கு மேல் வாகனங்களை நிறுத்தினால், கட்டணம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. அதிகபட்சமாக தற்போதைய கட்டணத்தின் ஒன்றரை மடங்கு வரை வசூலிக்கப்படலாம்.
பொது சாலைகளுக்கு மாற்றாக வாகன நிறுத்தும் வளாகங்களை பயன்படுத்துவோருக்கும் மாதாந்திர கட்டணம் நிர்ணயிக்கப்பட உள்ளது. இருசக்கர வாகனங்களுக்கு மாதம் ரூ.1,000 முதல் ரூ.2,000 வரையும், கார்களுக்கு ரூ.2,000 முதல் ரூ.4,000 வரையும் கட்டணம் வசூலிக்கப்படும். இரவு 8 மணி முதல் மறுநாள் காலை 8 மணி வரை மட்டும் வாகனங்களை நிறுத்தினால், மாதக் கட்டணத்தில் 50 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட உள்ளது.
மேலும், நகரில் உள்ள காலி நிலங்களை உரிமையாளர்கள் தாமாக முன்வந்து பொது வாகன நிறுத்துமிடங்களாக மாற்றினால், அந்த நிலங்களுக்கு 35 ஆண்டுகள் வரை சொத்து வரி விலக்கு வழங்கும் திட்டமும் முன்மொழியப்பட்டுள்ளது.
இதில் முக்கியமாக, தங்களது வீட்டின் முன்பாக காரை நிறுத்த விரும்புவோருக்கு தனி கட்டணம் விதிக்கப்பட உள்ளது. சிறிய கார்களுக்கு ஆண்டுக்கு ரூ.15,000, செடான் கார்களுக்கு ரூ.20,000, எஸ்யூவி கார்களுக்கு ரூ.25,000 செலுத்த வேண்டும். அதே நேரத்தில், அந்த இடத்தில் வாகனத்தை நிறுத்துவதால் மற்ற வாகனங்கள் செல்வதற்கு போதிய இடவசதி உள்ளதா என்பதை GBA மார்ஷல்கள் ஆய்வு செய்த பிறகே அனுமதி வழங்கப்படும்.
இந்த வரைவு திட்டம் குறித்து பொதுமக்கள் 30 நாட்களுக்குள் தங்கள் கருத்துகளை தெரிவிக்கலாம். பெறப்படும் கருத்துகளை பரிசீலித்த பிறகு இறுதி முடிவு எடுக்கப்படும் என GBA தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: 10 கி.மீ செல்ல 36 நிமிடமா? இந்தியாவின் ‘டிராஃபிக் தலைநகரம்’ பெங்களூரு! அதிர்ச்சி ரிப்போர்ட்!