×
 

வாகன ஓட்டிகளே உஷார்! சாலையோரம் கார், பைக் நிறுத்தினால் ரூ.25,000 அபாரதமாம்..!!

இந்த அனுமதி கட்டிட விதிகளின்படி போதிய நிறுத்த வசதி உள்ள வீடுகளின் உரிமையாளர்களுக்கு மட்டுமே வழங்கப்படும்.

இந்தியாவின் பெருநகரங்களில், குறிப்பாக சென்னை, பெங்களூரு போன்ற இடங்களில் மக்கள் தொகை பெருக்கத்திற்கு ஏற்ப உள்கட்டமைப்பு வசதிகள் போதாததால் சாலைகளிலும் தெருக்களிலும் கார்கள் வரிசையாக நிறுத்தப்படுவது அன்றாடக் காட்சியாக மாறியுள்ளது. இதற்கு தீர்வு காணும் நோக்கில் கர்நாடக அரசு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.

நகர்ப்புற வளர்ச்சித் துறை வெளியிட்ட Greater Bengaluru Authority (Parking) Rules, 2026 என்ற வரைவு விதிகளின்படி, பொது சாலைகளில் வாகனங்களை நிறுத்துவதற்கு இனி கட்டாயமாக கட்டணம் செலுத்த வேண்டும். குடியிருப்புப் பகுதிகளில் சாலையோரத்தில் காரை நிறுத்த ஆண்டு அனுமதிச் சீட்டு (Residential Parking Permit) தேவை. சிறிய கார்களுக்கு (ஹேட்ச்பேக்) ஆண்டுக்கு குறைந்தபட்சம் ரூ.15,000, செடான் கார்களுக்கு ரூ.20,000, எஸ்யூவிகளுக்கு ரூ.25,000 வசூலிக்கப்படும். 

இந்த அனுமதி கட்டிட விதிகளின்படி போதிய நிறுத்த வசதி உள்ள வீடுகளின் உரிமையாளர்களுக்கு மட்டுமே வழங்கப்படும். முக்கிய சாலைகளில் (arterial, sub-arterial) குடியிருப்பு நிறுத்தம் அனுமதிக்கப்படாது. சாலைகளில் மணிநேர அடிப்படையிலான கட்டணமும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சாலைகளை A, B, C என வகைப்படுத்தி, கார்களுக்கு ஒரு மணிநேரத்திற்கு ரூ.40 முதல் 80 வரை, இருசக்கர வாகனங்களுக்கு ரூ.20 முதல் 40 வரை வசூல் செய்யப்படும். நீண்ட நேரம் நிறுத்தினால் கூடுதல் கட்டணம் விதிக்கப்படும். 

இதையும் படிங்க: 10 கி.மீ செல்ல 36 நிமிடமா? இந்தியாவின் ‘டிராஃபிக் தலைநகரம்’ பெங்களூரு! அதிர்ச்சி ரிப்போர்ட்!

சாலைக்கு வெளியே உள்ள அமைக்கப்பட்ட நிறுத்தங்களில் கட்டணம் குறைவு – கார்களுக்கு மணிக்கு ரூ.20-40, இருசக்கர வாகனங்களுக்கு ரூ.10-20. மாதாந்திர கட்டணம் ரூ.1,000 முதல் 4,000 வரை. இரவு 8 மணி முதல் காலை 8 மணி வரை நிறுத்தினால் 50 சதவீத சலுகை உண்டு. இத்திட்டத்தின் நோக்கம் நெரிசலைக் குறைப்பது, நீண்ட நேர சாலையோர நிறுத்தத்தைத் தவிர்ப்பது மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட நிறுத்தங்களை ஊக்குவிப்பது. 

வெற்று தனியார் நிலங்களை நிறுத்தமாக மாற்ற ஊக்கத்தொகையும் வழங்கப்படும். மெட்ரோ நிலையங்கள், பஸ் நிறுத்தங்கள் அருகே நிறுத்தத் தடை உண்டு. பொதுமக்கள் இந்த வரைவு குறித்து 30 நாட்களுக்குள் ஆட்சேபனைகள் அல்லது ஆலோசனைகளை சமர்ப்பிக்கலாம். பெங்களூருவின் போக்குவரத்து நெருக்கடிக்கு இது ஒரு முக்கிய தீர்வாக அமையுமா என்பதை காலம்தான் சொல்லும்.

இதையும் படிங்க: டெல்லி உயர்நீதிமன்றம், செங்கோட்டைக்கு வெடிகுண்டு மிரட்டல்: போலீசார் தீவிர சோதனை!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share