அதிரடியாக களத்தில் இறங்கிய மத்திய அரசு..!! ஓலா, ஊபருக்கு ஆப்பு வைக்க வருகிறது 'பாரத் டாக்ஸி'..!!
நவ.1ம் தேதியில் இருந்து மத்திய அரசு சார்பாக நாடு முழுவதும் பாரத் டாக்ஸி என்ற சேவை அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
நடப்பு ஆண்டின் நவம்பர் மாதம் 1-ஆம் தேதி முதல், மத்திய அரசின் சார்பில் 'பாரத் டாக்ஸி' என்ற புதிய கூட்டுறவு அடிப்படையிலான டாக்ஸி சேவை டெல்லியில் தொடங்க உள்ளது. இது இந்தியாவின் முதல் அரசு ஆதரவுடைய கூட்டுறவு டாக்ஸி தளமாகும். ஓலா மற்றும் உபர் போன்ற தனியார் நிறுவனங்களின் அதிக கமிஷன் மற்றும் சர்ஜ் பிரைசிங் சிக்கல்களைத் தீர்க்கும் வகையில் இந்தத் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. கூட்டுறவு அமைச்சகம் மற்றும் தேசிய இ-ஆளுமைப் பிரிவு (NeGD) இணைந்து உருவாக்கிய இந்தச் சேவை, டிரைவர்களை உரிமையாளர்களாக்கி, அவர்களின் வருமானத்தை முழுமையாகப் பாதுகாக்கிறது.
பைலட் கட்டத்தில் டெல்லியில் 650 டிரைவர்கள்-உரிமையாளர்கள் மூலம் இச்சேவை தொடங்கும். இவர்கள் 'சார்தி' என்று அழைக்கப்படுவார்கள். டிரைவர்கள் தங்கள் வாகனங்களை நேரடியாக கூட்டுறவில் பதிவு செய்து, எந்தக் கமிஷனும் செலுத்தாமல் முழு வருமானத்தைப் பெறலாம். வாடிக்கையாளர்களுக்கு வெளிப்படையான கட்டணம், சர்ஜ் பிரைசிங் இல்லாமல் நிலையான விலை நிர்ணயம் என்பதே முக்கிய அம்சம். இந்தத் தளம் 'சகார டாக்ஸி கூட்டுறவு லிமிடெட்' என்ற அமைப்பால் நடத்தப்படும். இதன் தலைவராக அமுல் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் ஜெயன் மெஹ்தா நியமிக்கப்பட்டுள்ளார்.
இதையும் படிங்க: குழந்தைகளுக்கு Cough syrup கொடுக்கக்கூடாதா..?? மத்திய அரசின் அட்வைஸ் என்ன..??
பைலட் வெற்றி பெற்றால், டிசம்பர் மாதம் மும்பை, புனே, போபால், லக்னோ, ஜெய்ப்பூர் உள்ளிட்ட 20 நகரங்களுக்கு விரிவாக்கம் செய்யப்படும். 2026 மார்ச் முதல் மெட்ரோ நகரங்களில் இயங்கும் நிலைக்குக் கொண்டு வரப்பட்டு, 2030-ஆம் ஆண்டுக்குள் 1 லட்சம் டிரைவர்களைச் சேர்த்து, மாவட்ட தலைமையகங்கள் மற்றும் கிராமப்புறங்களுக்கும் விரிவாக்கும் திட்டம் உள்ளது. இந்தச் சேவை ஆண்ட்ராய்டு மற்றும் iOS-இல் 'பாரத் டாக்ஸி' ஆப் மூலம் கிடைக்கும். டிஜிலாக்கர் மற்றும் யூமாங் ஆப்ஸுடன் ஒருங்கிணைக்கப்பட்டு, பயணிகளுக்கும் டிரைவர்களுக்கும் எளிமையான அனுபவத்தை அளிக்கும்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மார்ச் மாதத்தில் பாராளுமன்றத்தில் அறிவித்த இத்திட்டம், 'சகாரில் இருந்து சம்ருதி' என்ற பிரதமர் மோடியின் பார்வையின் ஒரு பகுதியாகும். இது டிரைவர்களின் பொருளாதார மேம்பாட்டையும், பயணிகளின் நம்பகமான போக்குவரத்தையும் உறுதி செய்யும். தனியார் நிறுவனங்களின் அதிகாரத்தை சவால் செய்யும் இந்தப் புரட்சி, இந்தியாவின் போக்குவரத்துத் துறையில் புதிய அத்தியாயத்தைத் தொடங்குகிறது. டிரைவர்கள் மற்றும் பயணிகள் இருவருக்கும் இது பெரும் நிவாரணமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: குழந்தைகளுக்கு Cough syrup கொடுக்கக்கூடாதா..?? மத்திய அரசின் அட்வைஸ் என்ன..??