பீஹார் பயணிகள் ரயிலில் திடீரென பற்றிய தீ! கொளுந்துவிட்டெறிந்த பெட்டிகள்! அலறிய மக்கள்!
பீஹாரில் பயணிகள் ரயிலில் திடீரென தீப்பற்றி எரிந்த சம்பவம் பயணிகளிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
சசாரம்: பீஹாரில் சசாரம் - பாட்னா பயணிகள் ரயில் இன்று அதிகாலை திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் யாருக்கும் உயிரிழப்போ, காயமோ ஏற்படவில்லை என்பது ஆறுதலான தகவல்.
இன்று காலை 6 மணியளவில் சசாரம் ரயில் நிலையத்திற்கு வந்தடைந்த சசாரம் - பாட்னா பயணிகள் ரயிலின் ஒரு பெட்டியில் திடீரென தீ பற்றியது. ரயிலில் பயணம் செய்த பயணிகள் தீயைக் கண்டதும் அலறியடித்துக் கொண்டு வெளியே ஓடினர். சிலர் ஜன்னல்கள் வழியாகவும் குதித்து இறங்கியதாக சாட்சிகள் தெரிவித்தனர். தீ பற்றிய சில நிமிடங்களில் முழு ரயில் நிலையமே பீதியில் மூழ்கியது.
உடனடியாக ரயில்வே அதிகாரிகள் மற்றும் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீ மேலும் பரவாமல் தடுத்து, சுமார் அரை மணி நேரத்திற்குள் தீயை அணைத்தனர். ரயிலின் பாதிக்கப்பட்ட பெட்டி முழுவதும் கருகிய நிலையில் உள்ளது. மின் கசிவு அல்லது மின் இணைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இந்தத் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என ரயில்வே துறை அதிகாரிகள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
இதையும் படிங்க: வரதட்சணை தராததால் ஆத்திரம்?! கர்ப்பிணிக்கு நேர்ந்த கதி! முதலாமாண்டு திருமண நாளில் கணவன் வெறிச்செயல்!
இந்த சம்பவத்தால் சசாரம் ரயில் நிலையத்தில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டு ரயில் போக்குவரத்து படிப்படியாக இயல்பு நிலைக்குத் திரும்பியது.
இதேபோல் நேற்று அதிகாலை கேரளாவின் திருவனந்தபுரத்தில் இருந்து டெல்லி நோக்கி சென்ற ராஜதானி விரைவு ரயிலிலும் தீ விபத்து ஏற்பட்டது. இந்த இரு சம்பவங்களும் தொடர்ச்சியாக நடைபெற்றுள்ளதால், ரயில்வே துறையின் பாதுகாப்பு அமைப்புகள் குறித்து பயணிகள் மத்தியில் கேள்விகள் எழுந்துள்ளன.
ரயில்வே துறை சார்பில் விபத்துக்கான காரணம் குறித்து விரைவான விசாரணை நடத்தப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், இதுபோன்ற விபத்துகள் மீண்டும் ஏற்படாத வகையில் தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது.
பீஹார் தீ விபத்து சம்பவம் ரயில் பயணிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், ரயில்வே பாதுகாப்பு வலுப்படுத்தப்பட வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: டெல்லி ஏர்போர்ட்டில் பரபரப்பு..!! ஸ்விஸ் ஏர்லைன்ஸ் விமானத்தில் தீ..!! 6 பயணிகள் காயம்..!!