பீகார்!! தொகுதி பங்கீட்டில் நீடிக்கும் இழுபறி! கையை பிசையும் தேசிய கட்சிகள்!
பிகாரில் முதல் கட்ட சட்டப்பேரவைத் தேர்தலுக்கு வேட்புமனுத் தாக்கல் செய்ய வெள்ளிக்கிழமையே கடைசி நாள் என்ற நிலையில், தே.ஜ. கூட்டணியிலும், மகா கூட்டணியிலும் தொகுதிப் பங்கீட்டை நிறைவு செய்யாமல் உள்ளனர்.
நவம்பர் 6 மற்றும் 11 தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறவுள்ள பிகார் 243 சட்டசபைத் தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் அக்டோபர் 10 அன்று தொடங்கியுள்ளது. முதல் கட்டத்தில் 121 தொகுதிகளுக்கு நவம்பர் 6 அன்று வாக்குப்பதிவு நடைபெறும். வேட்புமனு தாக்கல் கடைசி நாள் அக்டோபர் 17 (வெள்ளி) என்பதால், இன்னும் மூன்று நாட்களே உள்ள நிலையில், ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி (தே.ஜ.)யில் தொகுதிப் பங்கீடு இறுதியானாலும், வேட்பாளர் தேர்வில் இழுபறி நீடிக்கிறது.
எதிர்க்கட்சி மகா கூட்டணியிலும் (ராஷ்ட்ரிய ஜனதா தளம் - காங்கிரஸ் உள்ளிட்டவை) தொகுதி ஒதுக்கீட்டில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால், அரசியல் வட்டங்களில் பரபரப்பு நிலவுகிறது.தே.ஜ. கூட்டணி: தொகுதி ஒதுக்கீடு இறுதி, ஆனால் வேட்பாளர் இழுபறிதே.ஜ. கூட்டணி தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்துள்ளது.
பாஜக மற்றும் ஐக்கிய ஜனதா தளம் (ஜே.டி.யூ.) தலா 101 தொகுதிகளில் போட்டியிடும். சிராக் பாஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சி (ராம் விலாஸ்) 29 இடங்கள், ராஷ்டிரிய லோக் மோர்ச்சா (ரா.லோ.மோ.) மற்றும் இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா (இ.அ.மோ.) தலா 6 இடங்கள் பெறும்.
இந்த அறிவிப்பு கடந்த ஞாயிறு (அக். 12) தர்மேந்திர பிரதானால் வெளியிடப்பட்டது. ஆனால், முக்கிய தொகுதிகளில் யார் போட்டியிடுவது என்பதில் சலசலப்பு. சோன்பர்சா, ராஜ்கிர் போன்ற ஜே.டி.யூ. வசமுள்ள தொகுதிகளை சிராக் பாஸ்வான் கோரியுள்ளார். சோன்பர்சாவில் அமைச்சர் ரத்னேஷ் சதா (நிதீஷ் நெருங்கிய நண்பர்) உறுப்பினராக உள்ளனர். ஏற்கெனவே சில நிர்வாகிகளுக்கு வாக்குறுதி கொடுத்ததால், நிதீஷ் குமார் தொகுதிகளை விட்டுக்கொடுக்க தயாரில்லை.
இதையும் படிங்க: பீகாரின் அடுத்த முதல்வர் யார்? யாருக்கு அரியணை!! முடிவெடுக்கும் பெண்கள்!
முன்னாள் அமைச்சர் ஜெய் குமார் சிங்கின் தொகுதியை ரா.லோ.மோ. கோருவதாக தகவல். அதை விட்டுக்கொடுத்தால் சுயேச்சையாக போட்டியிடுவதாக ஜெய் குமார் எச்சரித்துள்ளார். இந்த இழுபறியால், திங்கள் மாலை திட்டமிட்ட தே.ஜ. செய்தியாளர்கள் சந்திப்பு ரத்து செய்யப்பட்டது.
திங்கள் இரவு 9 மணி வரை மத்திய அமைச்சர்கள் தர்மேந்திர பிரதான், நித்யானந்த் ராய், துணை முதல்வர் சாம்ராட் செளத்ரி, பாஜக தலைவர் திலீப் ஜெய்ஸ்வால் ஆகியோர் சஞ்சய் ஜாவின் வீட்டில் ஆலோசனை நடத்தினர். உடன்பாடு இல்லாததால், இன்று (அக். 14) நிதீஷ் இல்லத்தில் ஜே.டி.யூ. மூத்த தலைவர்கள் முக்கிய கூட்டம் நடத்தவுள்ளனர். வேட்பாளர் பட்டியலை விரைவில் வெளியிட தே.ஜ. திட்டமிட்டுள்ளது.
எதிர்க்கட்சி மகா கூட்டணியிலும் தொகுதிப் பங்கீட்டில் இழுபறி நீடிக்கிறது. ராஷ்டிரிய ஜனதா தளம் (ரா.ஜ.த.) மற்றும் காங்கிரஸ் இடையே கருத்து வேறுபாடு. காங்கிரஸ் 100 இடங்கள் எதிர்பார்த்தது, ரா.ஜ.த. 61-63 மட்டுமே ஒதுக்குகிறது. ராகுல் காந்தி - தேஜஸ்வி யாதவ் நெருக்கமானாலும், கோட்டை தொகுதிகள் (கஹல்கான், நர்கட்டியகஞ்ச், செயின்பூர், பச்வாரா) விட்டுக்கொடுக்க வேண்டாம் என ராகுல் அறிவுறுத்தியாக கூறப்படுகிறது.
நேற்று (அக். 13) தில்லி சென்ற தேஜஸ்வி, காங்கிரஸ் தலைவர்களுடன் பேச்சு. திங்கள் நள்ளிரவு வரை ஆலோசனை நடந்தும் முடிவில்லை. ரா.ஜ.த. வேட்பாளர்களைத் தேர்வு செய்வதால் காங்கிரஸ் அதிருப்தி. இன்று இரவுக்குள் ஒதுக்கீட்டை முடிக்க காங்கிரஸ் தீவிரம் காட்டுகிறது.
தனித்துப் போட்டியிடும் பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி, 116 வேட்பாளர்கள் பட்டியலை இரு கட்டங்களாக வெளியிட்டுள்ளது. அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம், 32 பேர் கொண்ட முதல் கட்ட பட்டியலை வெளியிட்டது. மகா கூட்டணியில் இணைய முயற்சி தோல்வியுற்றதால், 100 இடங்கள் வரை போட்டியிட முடிவு செய்துள்ளது.
2020 தேர்தலில் தே.ஜ.-யில் ஜே.டி.யூ. 115, பாஜக 110 இடங்கள்; சிராக் பாஸ்வான் தனி 134. மகா கூட்டணியில் ரா.ஜ.த. 144, காங்கிரஸ் 70. இம்முறை சமநிலை மாறியுள்ளது.பிகார் தேர்தல், கூட்டணி உறுதி மற்றும் வேட்பாளர் தேர்வில் சவாலாக உள்ளது.
இதையும் படிங்க: பீகாரை கைப்பற்றப் போவது யார்? சூடு பிடிக்கும் தேர்தல் களம்! முதற்கட்ட வேட்புமனு தாக்கல் துவக்கம்!