வன்முறையாக மாறிய நீட் போராட்டம்... போர்க்களமான பீகார்..! கல்வீச்சு, தடியடியால் பரபரப்பு..!
பீகாரில் நடந்த நீட் எதிர்ப்பு போராட்டத்தில் வன்முறை வெடித்துள்ளது.
இந்தியாவில் மருத்துவக் கல்விக்கான நுழைவுத் தேர்வான நீட் தேர்வு, கடந்த சில ஆண்டுகளாகவே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. 2026ஆம் ஆண்டில் இந்தப் பிரச்னை உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. மே 3 அன்று நடைபெற்ற தேர்வில் கேள்வித் தாள் கசிவு குற்றச்சாட்டுகள் எழுந்ததைத் தொடர்ந்து, தேர்வு ரத்து செய்யப்பட்டது. இதனால் 22 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பாதிக்கப்பட்டனர். பின்னர் மீண்டும் தேர்வு நடத்தப்பட்டாலும், மாணவர்கள், அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகளிடையே கடும் எதிர்ப்பு வெடித்துள்ளது.
டெல்லியின் ஜந்தர் மந்தரில் ஜூன் 6 முதல் தொடர்ந்து நடைபெற்று வரும் போராட்டங்கள், இந்திய இளைஞர் எழுச்சியின் அடையாளமாக மாறியுள்ளன. 'கரப்பான் பூச்சி ஜனதா' உள்ளிட்ட இளைஞர் அமைப்புகளும், மாணவர் சங்கங்களான SFI, AISA போன்றவையும் இதில் முன்னணியில் உள்ளன. மாணவர்கள் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும், தேர்வு முறைகேடுகளுக்கு உயர்மட்ட விசாரணை வேண்டும், முழுமையான சீர்திருத்தங்கள் வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.
பீகாரில் நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்துள்ளது. போலீசார் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. இதன் காரணமாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியுள்ளனர். இதனால் பீகார் போராட்ட களம் போர்க்களமாக காட்சியளிக்கிறது. போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதாக குற்றம் சாட்டப்பட்டு வரும் நிலையில் பீகாரில் வன்முறை வெடித்து இருப்பது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
இதையும் படிங்க: நீட் போராட்டத்துக்கு பெற்றோர் தங்களது குழந்தைகளை அனுப்ப வேண்டாம்! பலிகடாவாக்காதீர்கள்! நடிகர் ரஞ்சித் சாடல்!
இதனிடையே, டெல்லி ஜந்தர் மந்தர் போராட்டம் தொடர்பாக பரப்பப்படும் தவறான வீடியோக்கள் பின்னணியில் இருப்பது பாகிஸ்தான் என காவல்துறை குற்றம் சாட்டியுள்ளது. பாகிஸ்தானில் இருந்து செயல்படும் சில சமூக ஊடகங்கள் போலியான உள்ளடக்கம் உள்ள வீடியோக்களை பரப்பி வருவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. போராட்ட வீடியோக்களை திருத்தங்கள் செய்து டீப் ஃபேக் வீடியோக்கள் வெளியிட்ட நான் இருக்கும் மேற்பட்ட கணக்குகள் முடக்கப்பட்டிருப்பதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. போராட்டம் தொடர்பான வீடியோக்களை பகிரும் முன்பு அதன் உண்மை தன்மை குறித்து அறிவது அவசியம் என்றும் டெல்லி காவல்துறை தெரிவித்திருக்கிறது.
இதையும் படிங்க: பிரதமர் மோடி செல்பி வீடியோ... ஒரே நாளில் 10 லட்சம் புதிய Followers, 30.5 கோடி Views! இன்ஸ்டாகிராமில் வெடித்த வைரல்!