×
 

பீகாரை புரட்டிப்போட்ட மழை..! இதுவரை 61 பேர் உயிரிழந்த சோகம்..!

பீகாரில் பெய்த கனமழை காரணமாக இதுவரை 61 பேர் உயிரிழந்துள்ளனர்.

பீகார் மாநிலத்தில் மின்னல், இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதன்படி, பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது. அதே சமயம், ஆங்காங்கே இடி, மின்னல்களால் உயிரிழப்பு சம்பவங்களும் நடைபெற்று வருகிறது.

கடந்த 48 மணி நேரத்தில் பீகார் மாநிலத்தின் பல மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. மேலும் சூறாவாளிக் காற்று பல இடங்களில் வீசியதுடன் பல நகரங்களில் ஆலங்கட்டி மழையும் பெய்ததுள்ளது.

இந்த கனமழை காரணமாக இதுவரை 61 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக நாளந்தா மாவட்டத்தில் மட்டும் 22 பேர் பலியாகி உள்ளதாகவும், மற்ற மாவட்டங்களிலும் உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன என்றும் கூறப்பட்டுள்ளது. பாட்னா, போஜ்பூர், ஷிவான் மற்றும் கயா, கோபால்கஞ்ச் மற்றும் ஜமுய் ஆகிய இடங்களிலும் பலி எண்ணிக்கை பதிவாகி இருப்பதாக மாவட்ட ஆட்சியர் சஷாங்க் பூபங்கர் உறுதிப்படுத்தினார். 

இதையும் படிங்க: வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி.. நியூ வானிலை அப்டேட்..!

பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் நடைபெற்று வரும் நிலையில், இறந்தவர்களின் உடல்கள் உடற்கூராய்வுக்குப் பிறகு அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்க அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மரங்கள் முறிந்து விழுந்ததில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்ட நிலையில் சீர்செய்யவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மன்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நக்மா கிராமத்தில் கடந்த வியாழக்கிழமை கோயில் மீது மரம் விழுந்ததில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். மழையின் போது பாதிக்கப்பட்டவர்கள் கோயிலில் தஞ்சம் புகுந்துள்ளனர். இதனிடையே கனமழையால் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு முதலமைச்சர் நிதீஷ்குமார் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் அவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: பாஜகவோடு கைக்கோர்த்ததில் பெருமை..! இது முன்னேற்றத்திற்கான கூட்டணி.. மார்தட்டிக் கொள்ளும் இபிஎஸ்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share