×
 

பாஜக ஆட்சிக்கு வந்தால் பொது சிவில் சட்டம் உறுதி! மேற்குவங்கத்தில் அமித் ஷா அதிரடி!

பொது சிவில் சட்டத்தை அமல்படுத்தியபின் வங்காளத்தில் யாரும் 4 திருமணங்கள் செய்துகொள்ள முடியாது என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

மேற்குவங்க மாநிலத்தின் அரசியல் களம் தற்போது சூடுபிடித்துள்ள நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அங்கு அதிரடியான தேர்தல் வாக்குறுதி ஒன்றை அளித்துள்ளார். மேற்குவங்கத்தில் பாஜக ஆட்சி அமைந்தவுடன் பொது சிவில் சட்டம் (UCC) உடனடியாக அமல்படுத்தப்படும் என அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய அமித் ஷா, மேற்குவங்க மக்கள் இந்த முறை மாற்றத்தை விரும்புகிறார்கள். பாஜக ஆட்சிக்கு வந்தவுடன், மாநிலம் முழுவதும் பொது சிவில் சட்டத்தை (Uniform Civil Code) நாங்கள் அமல்படுத்துவோம். இதுவே எங்களது முதன்மை இலக்காக இருக்கும் எனத் தெரிவித்தார்.

பொது சிவில் சட்டத்தின் தாக்கம் குறித்துப் பேசிய அவர், திருமணச் சட்டங்களில் கொண்டு வரப்படவுள்ள மாற்றங்களைச் சுட்டிக்காட்டினார் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்பட்ட பிறகு, வங்காளத்தில் எவரும் நான்கு திருமணங்கள் செய்துகொள்ள முடியாது. மதம் மற்றும் சமூக வேறுபாடின்றி திருமணங்கள், விவாகரத்து மற்றும் வாரிசுரிமைச் சட்டங்கள் அனைவருக்கும் பொதுவானதாக மாற்றப்படும் என அவர் ஆவேசமாக முழங்கினார்.

இதையும் படிங்க: தொகுதி மறுவரையறை: 2029 தேர்தலுக்கான மெகா சூழ்ச்சி! கபில் சிபல் பகீர் குற்றச்சாட்டு!

திரிணாமுல் காங்கிரஸ் தலைமையிலான மம்தா பானர்ஜி அரசு, வாக்கு வங்கி அரசியலுக்காகப் பொது சிவில் சட்டத்தை எதிர்ப்பதாக அமித் ஷா சாடினார். சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதை உறுதி செய்வதே பாஜகவின் நோக்கம். உத்தராகண்ட் மாநிலத்தைப் பின்பற்றி மேற்குவங்கத்திலும் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க சட்டம் கொண்டுவரப்படும் என அவர் உறுதியளித்தார்.

பெண்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும், சமூகத்தில் சமத்துவத்தை நிலைநாட்டவும் பொது சிவில் சட்டம் அவசியமானது என்று குறிப்பிட்ட அவர், வங்காளத்தில் நிலவும் ஊடுருவல் மற்றும் வாக்கு வங்கி அரசியலுக்கு இதுவே நிரந்தரத் தீர்வாக அமையும் எனக் கூறினார். மேற்குவங்கத் தேர்தல் களத்தில் அமித் ஷாவின் இந்த 4 திருமணத் தடை மற்றும் பொது சிவில் சட்டம் குறித்த பேச்சு, அம்மாநில அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: பீகாரில் 21 ஆண்டுகால நிதிஷ் குமார் ஆட்சி முடிவு! பாஜகவின் சாம்ராட் சௌத்ரி புதிய முதலமைச்சர் நாளை பதவி ஏற்பு!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share