நடுவானில் விமானம் வெடித்து சிதறும்?!! ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்திற்கு இமெயிலில் மிரட்டல்!
சென்னை, டில்லி, மும்பை, திருவனந்தபுரம், ஹைதராபாத் ஆகிய ஐந்து விமான நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை அடுத்து, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
தேசிய தலைநகர் டெல்லியில் நவம்பர் 10 அன்று செங்கோட்டை அருகே நடந்த கார் குண்டுவெடிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து, நாட்டின் முக்கிய விமான நிலையங்களில் பாதுகாப்பு அச்சம் அதிகரித்துள்ளது. இந்நிலையில், ஹரியானாவின் குருகிராமை தலைமையகமாகக் கொண்ட இண்டிகோ விமான நிறுவனத்துக்கு நேற்று (நவம்பர் 12) பிற்பகல் 3:30 மணிக்கு ஈ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் அனுப்பப்பட்டது. இந்த மிரட்டல், சென்னை, டெல்லி, மும்பை, திருவனந்தபுரம், ஹைதராபாத் ஆகிய ஐந்து சர்வதேச விமான நிலையங்களிலும் குண்டு வெடிக்கும் என்று எச்சரித்தது.
இந்த மிரட்டல் அனுப்பப்பட்டதன் உடனடி விளைவாக, அந்த ஐந்து விமான நிலையங்களிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டன. மோப்ப நாய்கள், குண்டு கண்டறியும் படைகள் மூலம் நுழைவாயில்கள், ரன்வேக்கள், டெர்மினல்கள் உள்ளிட்ட பகுதிகளில் விரிவான சோதனைகள் நடத்தப்பட்டன.
டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் மூன்று தீயணைப்பு வாகனங்கள் அனுப்பப்பட்டு, தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டது. எனினும், எந்த குண்டுகளும் கண்டுபிடிக்கப்படவில்லை. இதனால், இந்த வெடிகுண்டு மிரட்டல் ஒரு புரளி என்பது உறுதி செய்யப்பட்டது. விமான நிலையங்கள் சாதாரண நிலைக்குத் திரும்பியுள்ளன என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: டெல்லி கார்வெடிப்பு!! பிரியாணி தான் கோட்வேர்ட்! அயோத்தி ராமர் கோயிலுக்கு ஸ்கெட்ச்.. விசாரணையில் பகீர்!
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, மேலும் ஒரு வெடிகுண்டு மிரட்டல் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்துக்கு (IX 1023) வந்தது. மும்பையில் இருந்து உத்தரப் பிரதேசத்தின் வாரணாசிக்கு பயணித்த இந்த விமானம் நேற்று பகலில் பறந்து கொண்டிருந்தபோது, வாரணாசி விமான நிலையத்துக்கு ஈ-மெயில் மூலம் மிரட்டல் அனுப்பப்பட்டது. அந்த மிரட்டலில், “விமானத்தில் குண்டு வைக்கப்பட்டுள்ளது. நடுவானத்தில் வெடித்து விமானம் சிதறும்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இதையடுத்து, விமானத்தில் உள்ள குண்டு கண்டறியும் படை உட்பட பாதுகாப்பு அதிகாரிகள் தயாராக வைக்கப்பட்டனர். வாரணாசி விமான நிலையத்தில் பாதுகாப்பாக அவசர தரையிறக்கம் செய்யப்பட்ட விமானத்திலிருந்து 150க்கும் மேற்பட்ட பயணிகள் மற்றும் பணியாளர்கள் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். விமானம் முழுவதும் மோப்ப நாய்களுடன் சோதனை நடத்தப்பட்டது.
சோதனையில் எந்த சந்தேகமான பொருளும் கிடைக்கவில்லை. இதனால், இந்த மிரட்டலும் புரளி எனத் தெரியவந்தது. பயணிகள் பின்னர் வேறு விமானங்களில் அனுப்பப்பட்டனர். ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம், “பாதுகாப்பு நடைமுறைகளின்படி, அரசு அமைச்சரவைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர்” என்று அறிக்கை வெளியிட்டது.
இந்த மிரட்டல்கள் டெல்லி குண்டுவெடிப்புக்கு இணைந்தவை யாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இண்டிகோவின் புகார் போர்ட்டலில் அனுப்பப்பட்ட முதல் ஈ-மெயிலை பொலிஸ் விசாரித்து வருகிறது. வாரணாசி சம்பவத்துடன் இதன் தொடர்பை ஆராய்ந்து வருவதாக தேசிய விசாரணை அமைப்பு (என்ஐஏ) தெரிவித்துள்ளது. நாட்டின் முக்கிய விமான நிலையங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேலும் வலுப்படுத்த அரசு உத்தரவிட்டுள்ளது. பயணிகளிடையே அச்சம் நீங்க, விமான நிறுவனங்கள் தேறி தகவல் அளித்து வருகின்றன.
இதையும் படிங்க: கஷ்டப்பட்டு டாக்டருக்கு படிக்க வச்சோம்!! உமரு அப்பிடிபட்டவரு இல்ல!! கண்ணீர் விடும் குடும்பம்!