×
 

மதுரை ஆட்சியர் அலுவலகம் முதல் சிக்கந்தர் தர்கா வரை - தொடரும் வெடிகுண்டு மிரட்டலால் பரபரப்பு!

திருப்பரங்குன்றம் சிக்கந்தர் தர்காவிற்கு ரகசிய இமெயில் காரணமாக வெடிகுண்டு மிரட்டல் வந்த நிலையில், திவீர சோதனை நடைபெற்று வருகிறது. 

மதுரையில் இன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் விதமாக, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில், அதே மிரட்டல் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள புகழ்பெற்ற சிக்கந்தர் பாதுஷா தர்காவிற்கும் வந்துள்ளது. இதனால், பாதுகாப்புப் பணியாளர்கள் மத்தியில் கடும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

மதுரை முழுவதும் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்திய இந்த மிரட்டலைத் தொடர்ந்து, காவல்துறை உடனடியாகச் செயலில் இறங்கியது. வெடிகுண்டு தடுப்பு நிபுணர்கள் மற்றும் சிறப்புப் பாதுகாப்புக் குழுவினர் திருப்பரங்குன்றம் மலைமீது இருக்கும் சிக்கந்தர் தர்காவிற்கு விரைந்து சென்று தீவிர சோதனையை மேற்கொண்டனர். மேலும், தர்கா மற்றும் திருப்பரங்குன்றம் பெரிய ரத வீதியில் உள்ள மசூதியிலும் நுட்பமான சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

தற்போது, திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றுவது தொடர்பாக மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள சூழலில், இந்த ரகசிய இமெயில் மிரட்டல் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. தொடர்ச்சியான பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் காரணமாக மதுரை நகரில் உச்சகட்டப் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சோதனையில் இதுவரை வெடிகுண்டு தொடர்பான சந்தேகத்திற்குரிய பொருட்கள் எதுவும் கிடைக்கவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படிங்க: "5 முறை ஆட்சியில் இருந்த தி.மு.க. மதுரைக்கு என்ன செய்தது?" - மெட்ரோ, எய்ம்ஸ் குறித்துத் தமிழிசை செளந்தரராஜன் கேள்வி!

இதையும் படிங்க: மதுரை மாநாட்டில் ரூ.36,660 கோடி முதலீடு! 56,766 பேருக்கு வேலைவாய்ப்பு!- முதல்வர் ஸ்டாலினின் மெகா திட்டம்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share