×
 
☰

காலை உணவு திட்டம்..! "உணவு பரிமாறும் முன்பு இது கட்டாயம்..!! ஆசிரியர்களுக்கு அதிரடி உத்தரவு.!!

காலை உணவை ஆசிரியர்கள் ருசித்து பார்த்த பிறகே மாணவர்களுக்கு பரிமாற வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம், மாணவர்களின் ஊட்டச்சத்து தேவையை பூர்த்தி செய்வதோடு, கல்விச் செயல்பாட்டையும் மேம்படுத்தும் நோக்கில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. இத்திட்டம் முதலில் தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில், தற்போது ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

இந்த விரிவாக்க சூழலில் உணவின் தரம் மற்றும் உடல்நலப் பாதுகாப்பில் எவ்வித சமரசமும் இருக்கக்கூடாது என்பதை வலியுறுத்தி பள்ளிக் கல்வித்துறை அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. திட்டத்தின் முக்கிய அம்சமாக, சமைக்கப்பட்ட காலை உணவை மாணவர்களுக்கு வழங்குவதற்கு முன்பாக ஆசிரியர்கள் அதை ருசித்து தரத்தை உறுதி செய்ய வேண்டும் என்ற உத்தரவு வெளியிடப்பட்டுள்ளது.

உணவு சரியான வெப்பநிலையில், சுவையாகவும், ஊட்டச்சத்து மிகுந்ததாகவும் இருப்பதை ஆசிரியர்கள் நேரடியாக சரிபார்த்த பின்னரே மாணவர்களுக்கு பரிமாற வேண்டும். இதன் மூலம் எதிர்பாராத விபரீதங்கள் தடுக்கப்படும் என அதிகாரிகள் நம்புகின்றனர். சமையலறைகள் தூய்மையாகப் பராமரிக்கப்பட வேண்டும். புகை, தூசி, நூலாம்படை போன்றவை இல்லாமல் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். பாத்திரங்களை பயன்படுத்துவதற்கு முன்பும் பின்பும் நன்கு கழுவி சுத்தம் செய்ய வேண்டும். சமைத்த உணவை முழுமையாக மூடி வைத்து, தேவைப்படும்போது மட்டும் திறந்து வழங்க வேண்டும் என்ற வழிகாட்டுதல்களும் வழங்கப்பட்டுள்ளன.உணவுத் தரத்தில் எந்தவித சமரசமும் அனுமதிக்கப்படாது என்பதை பள்ளிக் கல்வித்துறை தெளிவுபடுத்தியுள்ளது.

இதையும் படிங்க: காலை உணவு விரிவாக்க தொடக்க விழாவில் மீண்டும் சர்ச்சை... அரசு பள்ளிக்குள் தவெக நிர்வாகிகள் செய்த அட்ராசிட்டி...!

காலை உணவுத்திட்ட சமையலின் தரம், மாணவர்களின் உடல்நலப் பாதுகாப்பு ஆகியவற்றில் கவனக்குறைவு ஏற்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். சமையலர்கள் மற்றும் தொடர்புடைய பணியாளர்கள் சுகாதார விதிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். உணவுப் பொருட்கள் தரமானவை என்பதை உறுதி செய்து, சரியான முறையில் சேமித்து வைக்க வேண்டும். தினசரி கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு, உணவு தயாரிப்பு முதல் பரிமாறும் வரை ஒவ்வொரு கட்டமும் பதிவு செய்யப்படும்.ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை திட்டம் விரிவுபடுத்தப்பட்ட நிலையில், அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் பயனடையும் சூழலில் தீவிரக் கண்காணிப்பு அவசியமாகிறது.

 

இதையும் படிங்க: ”எக்காரணம் கொண்டும் அப்படி நடக்கக்கூடாது”... காலை உணவு திட்டத்தை தொடங்கிய கையோடு சி.எம். விஜய் எச்சரிக்கை...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share