×
 

வீரியமெடுக்கும் பிரச்சனை..! புதுவையில் மேலும் 2 இருமல் மருந்துகளுக்கு தடை..!

புதுச்சேரியில் மேலும் இரண்டு இருமல் மருந்துகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

சமீப காலங்களில் இந்தியாவில் இருமல் மருந்துகள் தொடர்பான தடை நடவடிக்கைகள் பல்வேறு காரணங்களால் அதிகரித்துள்ளன. இவை முக்கியமாக குழந்தைகளின் உயிரிழப்புகளுடன் தொடர்புடையவை. மருந்துகளில் நச்சுத்தன்மை வாய்ந்த பொருட்கள் கலந்திருப்பது, மற்றும் சில மருந்து கலவைகளின் பாதுகாப்பின்மை ஆகியவற்றால் ஏற்பட்டுள்ளன.

2025 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள சிந்த்வாரா பகுதியில் பல குழந்தைகள் இருமல் மருந்து உட்கொண்ட பின்னர் சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டு உயிரிழந்தனர். இதில் Coldrif என்ற இருமல் சிரப் முக்கிய காரணமாக அடையாளம் காணப்பட்டது. இந்த மருந்து தமிழ்நாட்டில் உள்ள நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது.

ஆய்வில் நச்சு ரசாயனம் அதிக அளவில் கலந்திருந்தது கண்டறியப்பட்டது. இதனால் மத்தியப் பிரதேச அரசு உடனடியாக Coldrif-ஐ தடை செய்தது. பின்னர் மத்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பான தலையீட்டுடன் நாடு முழுவதும் இந்த மருந்துக்கு தடை விதிக்கப்பட்டது. இந்த நிலையில், குஜராத் மாநிலம் அகமதாபாத் பாவ்லா சந்த்கோதர் நெடுஞ்சாலையில் உள்ள எத்கெம் பார்மா சூட்டிக்கல் நிறுவனத்தின் தயாரிப்பான ரிஸ்பிபிரஸ் டி.ஆர். என்ற இருமல் மருந்துக்கு புதுவையில் தடை விதிக்கப்பட்டு உள்ளது.

இதையும் படிங்க: "Not Reachable"-ல் விஜய்!! கைமாறும் பவர் செண்டர்!! தவிக்கும் தவெக தொண்டர்கள்!!

மற்றொரு இருமல் மருந்தான மெடிகோப் டி சிரப் விற்பனைக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த 2 இருமல் மருந்துகளையும் மருந்துகடை உரிமையாளர்கள் வாங்கவும் விற்கவும் தடை விதிக்கப்படுவதாக கூறப்பட்டு உள்ளது. குழந்தைகளின் உயிரிழப்புகளுடன் தொடர்புடையவை. மருந்துகளில் நச்சுத்தன்மை வாய்ந்த பொருட்கள் கலந்திருப்பது இதுபோன்ற தடைகளுக்கு முக்கிய காரணமாக உள்ளது. 

இதையும் படிங்க: அதிமுக - அமமுக இணைப்பின் பின்னணியில் RSS! சக்சஸில் முடிந்த ஆபரேஷன்!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share