CBSE 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகின.. கடந்த ஆண்டை விட தேர்ச்சி விகிதம் அதிகரிப்பு..!
நாடு முழுவதும் சி.பி.எஸ்.சி 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இணையத்தில் வெளியானது.
கடந்த பிப்ரவரி மாதம் 15-ஆம் தேதி முதல் ஏப்ரல் 4-ம் தேதி வரை நடைபெற்ற சி.பி.எஸ்.சி. 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகின. தேர்வு முடிவுகளை cbse.gov.in, cbseresults.nic.in, and results.cbse.nic ஆகிய இணையதளங்களில் அறிந்துக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தேர்வில் 88.39 சதவீத மாணவர்கள் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளதாகவும், கடந்த ஆண்டை விட தேர்ச்சி சதவீதம் 0.41 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்த ஆண்டும் மாணவர்களை விட மாணவிகளின் தேர்ச்சி 5 விகிதம் அதிகம் என்றும் 91 சதவீதத்துக்கும் அதிகமான மாணவிகள் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்வில் சென்னை மண்டலத்தில் 97.39 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். சிபிஎஸ்இ தேர்வில் அதிகபட்சமாக விஜயவாடாவில் 99.60% பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். குறைந்தபட்சமாக பிரயாக்ராஜ் மண்டலத்தில் 79.53% பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
சிபிஎஸ்இ தேர்வில் 99.6 சதவீத தேர்ச்சியுடன் விஜயவாடா மண்டலம் முதலிடத்திலும் 99.32% சதவீதத்தில் திருவனந்தபுரம் இரண்டாம் இடத்திலும் 97.39 சதவீத தேர்ச்சியுடன் சென்னை மண்டலம் 3-ஆவது இடத்திலும் உள்ளன. பெங்களுரு 95.95%, டெல்லி மேற்கு 95.37%, டெல்லி கிழக்கு 95.06%, சண்டிகர் 91.61%, பஞ்சகைலா 91.17%, புனே 90.93%, அஜ்மீர் 90.40%, புவனேஸ்வர் 83.64%, கவுகாத்தி 83.62%, டேராடூன் 83.45%, பாட்னா 82.86%, போபால் 82.46%. நொய்டா 81.29% பிரயாக்ராஜ் மண்டலத்தில் 79.53% பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
இதையும் படிங்க: அமெரிக்க அதிபர் டரம்ப் தலையீடு பற்றி ஒரு வார்த்தை ஏன் பேசல.? பிரதமர் மோடிக்கு கபில்சிபல் அடுக்கடுக்காக கேள்விகள்!
இதையும் படிங்க: போர் நிறுத்தத்திற்கு மத்தியஸ்தம் செய்ததா அமெரிக்கா.? மோடி சர்க்காருக்கு ஆதரவாக பேசும் சசி தரூர்!