மாணவர்களே கவனிங்க... +2 சிபிஎஸ்சி விடைத்தாள் சரிபார்ப்பு... வரும் 6 ஆம் தேதி வரை விண்ணப்பிக்க அவகாசம்.!
சிபிஎஸ்சி 12ஆம் வகுப்பு விடைத்தாள் சரிபார்ப்பு செய்ய அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
2026 ஆம் ஆண்டு சிபிஎஸ்சி 12ஆம் வகுப்பு தேர்வுகள் பிப்ரவரி 17 முதல் ஏப்ரல் 15 வரை நடைபெற்றன. தேர்வு முடிவுக்குப் பின் பதில்தாள் மதிப்பீட்டு பணிகள் விரைவாக முடிக்கப்பட்டு, மே 13 அன்று முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இந்த ஆண்டு மொத்தம் சுமார் 17.8 லட்சம் மாணவர்கள் பதிவு செய்திருந்த நிலையில், பெரும்பாலானோர் தேர்வு எழுதினர். மொத்த தேர்ச்சி விகிதம் 85.20 சதவீதமாகப் பதிவாகியுள்ளது.
கடந்த ஆண்டு இது 88.39 சதவீதமாக இருந்தது. இவ்வாண்டு தேர்ச்சி விகிதம் சுமார் 3.19 சதவீதப் புள்ளிகள் குறைந்துள்ளது.பெண் மாணவர்கள் இந்த ஆண்டும் சிறப்பாகச் செயல்பட்டனர். பெண்களின் தேர்ச்சி விகிதம் சுமார் 88.86 சதவீதமாகவும், ஆண் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 82.13 சதவீதமாகவும் இருந்தது. பெண்கள் ஆண்களை விட சுமார் 6.73 சதவீதப் புள்ளிகள் முன்னிலை வகித்தனர்.
இது சிபிஎஸ்சி தேர்வுகளில் தொடர்ந்து காணப்படும் போக்கை உறுதிப்படுத்துகிறது. முடிவுகளில் திருப்தியடையாத மாணவர்கள் மறுமதிப்பீடு (re-evaluation), பதில்தாள் நகல் (photocopy) மற்றும் சரிபார்ப்பு (verification) ஆகியவற்றுக்கு விண்ணப்பிக்கலாம்.
இதையும் படிங்க: ராஜா ராஜாதான்... ராஜாங்கம் தொடரட்டும்... திமுக தலைவர் ஸ்டாலின் வாழ்த்து..!
சிபிஎஸ்இ +2 விடைத்தாள் சரிபார்ப்பு, மறுமதிப்பீடு போர்டல் திறக்கப்பட்டுள்ளது. இன்று முதல் வரும் 6ம் தேதி வரை மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்கலாம் என சிபிஎஸ்சி அறிவித்துள்ளது. மதிப்பெண் சரிபார்ப்பு செய்ய விடைத்தாள் ஒன்றுக்கு ரூ.100 கட்டணம் என்றும் கேள்விகளை மறுமதிப்பீடு செய்ய கேள்வி ஒன்றுக்கு ரூ.25 கட்டணம் எனவும் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: வீடுதேடி வரும் அதிகாரிகள்.. ஆக. 1 முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள்... தீவிர நடவடிக்கை..!