×
 

பருத்தி மீதான இறக்குமதி வரி ரத்து!! இந்திய ஜவுளித் துறைக்கு குட் நியூஸ் சொன்ன மத்திய அரசு!

இந்திய ஜவுளித் துறைக்கு பருத்தி கிடைப்பதை அதிகரிக்கும் பொருட்டு, வரும் ஜூன் 1ம் தேதி முதல் அக்டோபர் 30ம் தேதி வரை பருத்தி மீதான இறக்குமதி வரி ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

நாட்டின் ஜவுளித் துறையின் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் மத்திய அரசு முக்கிய முடிவு ஒன்றை எடுத்துள்ளது. வரும் ஜூன் 1-ம் தேதி முதல் அக்டோபர் 30-ம் தேதி வரை பருத்தி இறக்குமதிக்கான வரியை முழுமையாக ரத்து செய்வதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

பொதுவாக இந்தியாவில் பருத்தி இறக்குமதிக்கு 11 சதவீதம் வரி விதிக்கப்படும். ஆனால், உள்நாட்டில் பருத்தி பற்றாக்குறை ஏற்படும் சமயங்களில் இந்த வரியை தற்காலிகமாக தள்ளுபடி செய்யும் வழக்கம் உள்ளது. ஜவுளித் தொழில் அமைப்புகள் நீண்ட காலமாக இந்த வரி விலக்கைக் கோரி வந்த நிலையில், மத்திய அரசு இந்த முடிவை எடுத்துள்ளது.

இந்திய ஜவுளித் துறை உலக அளவில் மிகப் பெரிய அளவில் செயல்படும் துறையாகும். ஏராளமான தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் இந்தத் துறைக்கு தொடர்ச்சியான மூலப்பொருள் தேவைப்படுகிறது. உள்நாட்டு பருத்தி உற்பத்தி போதுமான அளவில் இல்லாத சூழலில், இறக்குமதி வரியை ரத்து செய்வது மிகப் பெரிய நிவாரணமாகப் பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: இந்தியாவுக்கு கூடுதல் பலம் சேர்க்கும் வாயு அஸ்த்ரா-1 100 கி.மீ., இலக்கை துல்லியமாக தாக்கும் திறன்! ஏவுகணை சோதனை வெற்றி!

இந்த அறிவிப்பு ஜவுளி ஆலைகள், நெசவாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்களுக்கு பெரும் உற்சாகத்தை அளித்துள்ளது. வரி ரத்து செய்யப்படுவதால் பருத்தியின் விலை குறையும், அதனால் ஜவுளி உற்பத்தி செலவும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது இறுதியில் உள்நாட்டு சந்தையில் துணி விலை குறைவுக்கு வழிவகுக்கும் என்றும் கூறப்படுகிறது.

ஜவுளித் துறை நிபுணர்கள் இந்த முடிவை வரவேற்றுள்ளனர். உள்நாட்டு பருத்தி உற்பத்தியை அதிகரிக்க நீண்டகால திட்டங்கள் தேவை என்றாலும், உடனடி தேவையைப் பூர்த்தி செய்ய இந்த வரி விலக்கு உதவும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த அறிவிப்பு ஜூன் 1 முதல் அக்டோபர் 30 வரை 5 மாதங்களுக்கு நடைமுறையில் இருக்கும். இந்த காலகட்டத்தில் பருத்தி இறக்குமதி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் ஜவுளித் துறையின் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது.

தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களில் ஜவுளித் தொழில் பெரிய அளவில் உள்ள நிலையில், இந்த முடிவு தொழிலாளர்கள் மற்றும் தொழில் முதலாளிகளுக்கு நல்ல செய்தியாக அமைந்துள்ளது. 

இதையும் படிங்க: இத திமுக ஆட்சியில கேப்பீங்களா? காலி பண்ணிருப்பாங்க! பிரஸ்மீட்டில் டென்ஷனான செங்கோட்டையன்!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share