சென்னையில் பரபரப்பு... GST அலுவலகம், வானிலை மையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்...!
நுங்கம்பாக்கத்தில் உள்ள Gst தலைமை அலுவலகம் மற்றும் வானிலை மையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
அண்மைக் காலங்களில் இந்தியாவில் வெடிகுண்டு மிரட்டல்கள் அதிகரித்து வருவது பொதுமக்கள் மற்றும் அதிகாரிகளிடையே பெரும் அச்சத்தையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த மிரட்டல்கள் பெரும்பாலும் விமான நிலையங்கள், விமானங்கள், பள்ளிகள், மருத்துவமனைகள் மற்றும் முக்கிய பொது இடங்களை குறிவைத்து விடுக்கப்படுகின்றன. இவை பெரும்பாலும் போலியானவையாக இருந்தாலும், பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் அமைதியை குலைப்பதோடு, பொருளாதார மற்றும் நிர்வாக ரீதியாக பெரும் பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன.
இந்த மிரட்டல்கள் பெரும்பாலும் போலியானவையாக இருந்தாலும், ஒவ்வொரு மிரட்டலையும் தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் அதிகாரிகள் உள்ளனர். இதனால், ஒவ்வொரு முறையும் வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய்கள் மற்றும் பாதுகாப்பு படைகள் உடனடியாக சோதனை நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்படுகின்றனர். இவை பெரும்பாலும் புரளிகளாக முடிவடைந்தாலும், இத்தகைய சம்பவங்கள் பொதுமக்களிடையே பயத்தை உருவாக்குவதோடு, பயணத் தாமதங்கள், பொருளாதார இழப்புகள் மற்றும் நிர்வாக சிக்கல்களை ஏற்படுத்துகின்றன.
பள்ளிகள், கல்லூரிகள், அரசு அலுவலகங்கள், அரசியல்வாதிகள் வீடுகள் மற்றும் அலுவலகங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வரும் நிலையில், சமீபத்தில் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இது போன்ற மிரட்டல்கள் புரளியாக இருந்தாலும் கூட அதீத கவனம் செலுத்த வேண்டிய சூழல் நிலவுகிறது. இந்த நிலையில், சென்னை நுங்கம்பாக்கத்தில் செயல்பட்டு வரும் Gst தலைமை அலுவலகம், வானிலை மையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
இதையும் படிங்க: உங்க ஸ்கூல்ல பாம் வெச்சிருக்கோம்.. பரபரப்பான டெல்லி.. பதறிய ஆசிரியர்கள், மாணவர்கள்..!!
மர்ம நபர் ஒருவர் கடிதம் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நிலையில் மோப்ப நாய்களைக் கொண்டு வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை மேற்கொண்டனர். இந்த சம்பவத்தால் இயல்பு நிலை பாதிக்கப்பட்டது. வெடிகுண்டு மிரட்டல் கொடுத்து கடிதம் அனுப்பிய நபர் யார் என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: பரபரப்பான நீதிமன்றங்கள்.. டெல்லி, மும்பை கோர்ட்களுக்கு அடுத்தடுத்து வெடிகுண்டு மிரட்டல்..!!