இந்தியாவுக்கு புது தலைவலி..! பிரம்மபுத்திரா மீது சீனாவின் பிடி...! அணைக் கட்ட ஆர்வம்..!!
இந்தியாவின் எதிர்ப்பை மீறி சீனா அணை கட்டும் பணிகளை மேற்கொள்கிறது.
இந்தியாவின் தொடர்ச்சியான கடும் எதிர்ப்பையும் மீறி சீனா, உலகின் மிகப்பெரிய நீர்மின்னியல் அணையை பிரம்மபுத்திரா நதியின் குறுக்கே கட்டும் பணியைத் தொடங்கியுள்ளது. அருணாச்சல பிரதேச எல்லையிலிருந்து வெறும் 50 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள இந்த அணை, இந்தியா மற்றும் வங்கதேசத்தின் நீர் வளம், விவசாயம், சுற்றுச்சூழல் மற்றும் பாதுகாப்புக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என இரு நாடுகளும் கவலை தெரிவித்துள்ளன.
இந்த மெகா திட்டம் மெடோக் நீர்மின்னியல் நிலையம் என்று அழைக்கப்படுகிறது. இது யார்லுங் சாங்போ நதியின் கீழ்ப்பகுதியில், உலகின் மிக ஆழமான மற்றும் நீளமான பள்ளத்தாக்கு பகுதியில் கட்டப்படுகிறது. சுமார் 1.37 லட்சம் மில்லியன் டாலர் செலவில் உருவாக்கப்படும் இந்த அணை, தற்போதைய உலகின் மிகப்பெரிய மூன்று பள்ளத்தாக்கு அணையை விட மூன்று மடங்கு மின்சாரம் உற்பத்தி செய்யும் திறன் கொண்டதாக இருக்கும்.
ஆண்டுக்கு சுமார் 300 பில்லியன் கிலோவாட் மணி நேர மின்சாரம் உற்பத்தி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. 60,000 மெகாவாட் திறன் கொண்ட இந்த திட்டம் 2033-க்குள் முழுமையாக இயங்கத் தொடங்கும் என சீனா தெரிவித்துள்ளது. புவியியல் மற்றும் மூலோபாய முக்கியத்துவம்பிரம்மபுத்திரா நதி திபெத்தில் உருவாகி, இந்தியாவின் அருணாச்சல பிரதேசத்திற்குள் நுழைந்து, அசாம் வழியாக வங்கதேசத்தை அடைந்து வங்காள விரிகுடாவில் கலக்கிறது.
இதையும் படிங்க: ஜம்மு காஷ்மீர் குறித்து கருத்து சொல்ல யாருக்கும் உரிமையில்லை!! சீனா, பாகிஸ்தானை வெளுத்து வாங்கிய இந்தியா!
சீனாவின் அணை இந்த நதியின் இந்திய எல்லைக்கு மிக அருகில், உலகின் மிக ஆழமான பள்ளத்தாக்கில் அமைக்கப்படுவதால், நதியின் இயற்கையான ஓட்டத்தை முழுமையாகக் கட்டுப்படுத்தும் திறன் சீனாவுக்கு கிடைக்கும். இது “நீர் ஆயுதம்” போன்று பயன்படுத்தப்படலாம் என இந்திய அதிகாரிகள் அஞ்சுகின்றனர். வறண்ட காலங்களில் தண்ணீர் தடை செய்வது அல்லது மழைக்காலங்களில் திடீர் வெள்ளத்தை ஏற்படுத்துவது போன்ற சாத்தியக்கூறுகள் உள்ளன. சுற்றுச்சூழல் மிகவும் உடையக்கூடிய இந்த பகுதியில் பெரிய அணை கட்டுவது சுற்றுச்சூழல் பேரழிவை ஏற்படுத்தலாம் என வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.
இதையும் படிங்க: வைகை அணையில் சட்டவிரோதமாக எடுக்கப்படும் நீர்..!! பற்றாக்குறையால் பொதுமக்கள் அவதி..! கடும் குற்றச்சாட்டு..!!