சென்னை டூ ஜோலார்பேட்டை... ரயிலில் புறப்பட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்...!
வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்களோடு மக்களாக ரயிலில் பயணித்துள்ளார்.
திமுக வடக்கு மண்டல வாக்குச்சாவடி குழு பயிற்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக சென்னையிலிருந்து ஜோலார்பேட்டை வரை முதலமைச்சர் முக்க ஸ்டாலின் ரயிலில் பயணம் மேற்கொள்கிறார்.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் திமுக சார்பில் “எண் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி” என்ற தலைப்பில் திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த மண்டலவாடி பகுதியில் இன்று மாலை சுமார் 5 மணி அளவில் வடக்கு மண்டல திமுக சார்பில் பிஎல்ஏ2 பி, டிஏ, பிஎல்சி உள்ளிட்ட வாக்குச்சாவடி குழு பயிற்சி மாநாடு நடைபெற உள்ளது.
இந்த மாநாட்டிற்காக ஜோலார்பேட்டையை அடுத்த மண்டலவாடி பகுதியில் சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்டமான பந்தல் மற்றும் மேடை அமைக்கப்பட்டுள்ளது. இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக தற்போது தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது இல்லத்தில் இருந்து புறப்பட்டு சென்னை எம்ஜிஆர் சென்ட்ரல் ரயில்வே நிலையத்திலிருந்து பிருந்தாவனம் எக்ஸ்பிரஸ் ரயிலில் புறப்பட்டு மக்களோடு மக்களாக பயணித்து ஜோலார்பேட்டை சென்றடைகிறார். சுமார் 11 மணி அளவில் ஜோலார்பேட்டை ரயில் நிலையம் சென்றடையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, திமுக நிர்வாகிகள், அமைச்சர்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் உற்சாகமாக வரவேற்கவுள்ளனர்.
இதையும் படிங்க: தமிழக அரசியலில் நெகிழ்ச்சி...!! நேரில் நலம் விசாரித்த முதல்வர்... ஸ்டாலின் கையைப் பிடித்து உருகிய எச்.ராஜா...!
அங்கிருந்து சாலை சாலை மார்க்கமாக திருப்பத்தூர் சர்க்யூட் ஹவுஸ் சென்று ஓய்வெடுக்கும் முதலமைச்சர், இன்று மதியம் வரை 4:00 மணி வரை தங்குகிறார். அதன் பின்னர், அங்கிருந்து பயணித்து ரோட் ஷோவில் பங்கேற்கும் முதலமைச்சர், மீண்டும் மாலை 5 மணி அளவில் மாநாட்டில் பங்கேற்று உரையாற்றுகிறார். மாநாட்டில் கலந்துகொண்டு பூத் கமிட்டி நிர்வாகிகளுக்குத் தேர்தல் காலப்பணிகள், வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு மற்றும் வாக்குச்சாவடி மேலாண்மை குறித்த முக்கிய ஆலோசனைகளை அவர் வழங்க உள்ளார். பின்னர் மாலை சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் அவர் சென்னை திரும்புகிறார்.
இந்த பிரம்மாண்ட மாநாட்டில் ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, தர்மபுரி, கிருஷ்ணகிரி மற்றும் சேலம் உள்ளிட்ட வடக்கு மண்டலத்தைச் சேர்ந்த 47 சட்டமன்றத் தொகுதிகளின் நிர்வாகிகள் பங்கேற்கின்றனர். சுமார் 1.75 லட்சம் பேர் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால், திருப்பத்தூர் முதல் வாணியம்பாடி வரை போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. லட்சக்கணக்கான தொண்டர்கள் திரளுவதால் பாதுகாப்புப் பணிகள் மிகுந்த கவனத்துடன் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: ரூ.5,000 அறிவிப்பு..!! இபிஎஸ் வாயை அடைத்த முதல்வர் ஸ்டாலின்..!! அமைச்சர் ரகுபதி சரவெடி..!!