டெல்லியை உற்றுநோக்கும் அரசியல்..! ஜனாதிபதியுடன் முதல்வர் விஜய் சந்திப்பு..!!
டெல்லியில் குடியரசு தலைவர் திரௌபதி முர்முவை முதல்வர் விஜய் சந்தித்தார்.
தமிழ்நாட்டின் புதிய முதலமைச்சராகப் பொறுப்பேற்ற திரு. சி. ஜோசப் விஜய், டெல்லியில் முக்கிய அரசியல் மற்றும் நிர்வாக சந்திப்புகளை மேற்கொண்டு வருகிறார். இந்தப் பயணத்தின் ஒரு பகுதியாக, இன்று மாலை ராஷ்டிரபதி பவனில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை மரியாதை நிமித்தமாக சந்தித்தார். இது அவரது முதலமைச்சர் பொறுப்பேற்ற பிறகான முக்கிய சந்திப்புகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
தமிழக அரசியலில் தமிழக வெற்றிக் கழகம் தலைமையில் புதிய அரசு அமைந்த பிறகு, முதலமைச்சர் விஜய் டெல்லிக்கு முதன்முறையாகச் சென்றபோது பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து தமிழ்நாட்டின் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தார்.
அதைத் தொடர்ந்து, மூன்று நாள் அரசுமுறைப் பயணமாக டெல்லி சென்றுள்ள இந்தப் பயணத்தில் நிதி ஆயோக் ஆளுநர் கூட்டம் உள்ளிட்ட முக்கிய நிகழ்வுகளில் பங்கேற்கவும், மத்திய அரசின் உயர்மட்டத் தலைவர்களுடன் பேசவும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்தச் சூழலில் குடியரசுத் தலைவருடனான சந்திப்பு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்தது.
இதையும் படிங்க: முதல்வர் விஜய் ஆக்சன் MODE.. அடுத்தடுத்த சந்திப்புகள்... எகிறும் எதிர்ப்பார்ப்பு..!!
அதைத்தொடர்ந்து துணை குடியரசுத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணனை மாலை 5.45 மணிக்கு சந்திக்க இருக்கிறார். டெல்லியில் மாலை 6:30 மணிக்கு காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியை முதல்வர் விஜய் சந்திக்கிறார். இதை அடுத்து டெல்லியில் நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தில் விஜய் பங்கேற்க உள்ளார். பின்னர் ஜூன் பன்னிரண்டாம் தேதி முதல்வர் விஜய் உடுப்பி மூகாம்பிகை கோவிலில் தரிசனம் மேற்கொள்கிறார்.
இதையும் படிங்க: டெல்லியில் முதல்வர் விஜய்...! 2வது முறையாக டைரக்ட் VISIT..! காவல்துறை மரியாதையுடன் உற்சாக வரவேற்பு..!!