×
 
☰

மாமாவ பாருடா செல்லம்.! மழலைகளை அள்ளிக் கொஞ்சிய முதல்வர்...! முத்த மழை..!!

தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர் விஜய் குழந்தைகளை தூக்கிக் கொஞ்சி முத்தமிட்டு மகிழ்ந்தார்.

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டது. இந்தத் திட்டத்தை முதல்வர் விஜய் தொடங்கி வைத்து, பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரங்களை அணிவித்து சிறப்பித்தார். பட்டு வேட்டியும் சட்டையும் அணிந்து தாய்மாமனாக வந்து, குழந்தைகளுக்கு மோதிரங்களை அன்போடு வழங்கினார்.

முத்து யாழினி என்ற பெண் குழந்தைக்கு மண்டியிட்டு தங்க மோதிரத்தை அணிவித்தபோது, குழந்தை அவரை கண்கொட்டாமல் பார்த்தது. அந்தக் காட்சி அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது. குழந்தையுடன் ஹைஃபை கொடுத்து மகிழ்ச்சியுடன் உரையாடிய முதல்வர், மேடையில் இந்து, இஸ்லாம், கிறிஸ்தவம் ஆகிய மூன்று மதங்களைச் சேர்ந்த குழந்தைகளுக்கும் அடுத்தடுத்து தங்க மோதிரங்களை அணிவித்தார்.

ஒரு குழந்தையை கைகளில் தூக்கியபோது, அதன் தாய் “மாமாவை பாருடா தங்கம்” என்று அறிமுகப்படுத்தினார்.தாய்மார்கள் தங்கள் குழந்தைகளை முதல்வர் தூக்க வேண்டும் என்ற ஆவலுடன் கொடுத்தனர். அவர் குழந்தைகளை அள்ளித் தூக்கிக் கொஞ்சி, முத்தமிட்டு மகிழ்ந்தார். இந்த நிகழ்வு குழந்தைகளின் நலனையும் குடும்ப உறவுகளையும் வலியுறுத்தும் விதமாக அமைந்தது. தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் மூலம் புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கு ஆசீர்வாதமாக தங்க மோதிரம் வழங்கப்படும் என்பது தெரிவிக்கப்பட்டது.

இதையும் படிங்க: #BREAKING: தாய் மாமனாக மாறிய முதல்வர் விஜய்..! மதுரையில் மாஸ் ஆரம்பம்..! குழந்தைகளுக்கு தங்க மோதிரம் போட்ட CM..!!

மருத்துவமனையில் நடைபெற்ற இந்த விழாவில் முதல்வர் விஜயின் அன்பான அணுகுமுறை அனைவரையும் கவர்ந்தது. குழந்தைகளுடன் அவர் பகிர்ந்த தருணங்கள் நிகழ்வின் சிறப்பம்சமாகத் திகழ்ந்தன. மத வேறுபாடின்றி அனைத்து குழந்தைகளையும் சமமாக அரவணைத்த அவரது செயல், சமூக ஒற்றுமையை எடுத்துக்காட்டியது. தாய்மார்கள் மகிழ்ச்சியுடன் கலந்துகொண்ட இந்த நிகழ்வு, அரசின் குழந்தை நலத் திட்டங்களுக்கு மேலும் வலு சேர்த்தது. தொடர்ந்த சில குழந்தைகளின் உடையில் கையொப்பமிட்டு மகிழ்ந்தார். இரண்டு குழந்தைகளுக்கு பெயர் வைத்தார் முதல்வர் விஜய்.

 

இதையும் படிங்க: மதுரையில் முதல்வர்.. வழிநெடுகிலும் பூமழை... CM விஜய்க்கு உற்சாக வரவேற்பு..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share