×
 

2வது முறையாக நாளை ஜம்மு காஷ்மீர் செல்கிறார் ராகுல்காந்தி... காரணம் இதுதான்!!

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி நாளை ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் பகுதிக்கு பயணம் மேற்கொள்கிறார்.

காஷ்மீரில் கடந்த 22 ஆம் தேதி பஹல்காமில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் அங்கு இருந்த சுற்றுலாப் பயணிகள் சுமார் 26 பேர் கொல்லப்பட்டனர். இதை அடுத்து பாகிஸ்தானுக்கு எதிராக அதிரடியான முடிவுகள் எடுக்கப்பட்டன. இதனால் இந்தியா பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்து வந்தது.

இந்த சூழலில் இந்திய ராணுவம் 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 9 பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டது. இந்த தாக்குதலில் 100க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.

இதையும் படிங்க: பாகிஸ்தானுக்கு செக்... நெதர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஜெய்சங்கர்; பின்னணி இதுதனாம்!!

இதனால் இருநாடுகளுக்கிடையே பதற்றமான சூழல் நிலவியது. 4 நாட்களுக்கு பின்னர் இரு நாடுகளும் போர் நிறுத்த முடிவுக்கு வந்தன. இந்நிலையில் ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் பகுதிக்கு காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி நாளை பயணம் மேற்கொள்கிறார். பாகிஸ்தான் ராணுவ டிரோன் தாக்குதலில் உயிரிழந்தோர் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறுகிறார்.

ஏப்.25 ஆம் தேதி ஸ்ரீநகர் சென்ற ராகுல்காந்தி, பஹல்காம் தாக்குதலில் இறந்தோருக்கு ஆறுதல் கூறியிருந்தார். பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, ராகுல் காந்தி ஜம்மு காஷ்மீர் செல்வது இது இரண்டாவது முறை என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: பொறுப்புக்கு புறம்பான செயல்... மேலும் ஒரு பாக். தூதரக அதிகாரி வெளியேற கெடு!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share