தேர்தல் ஆணையத்துக்கு பாடை... போராட்டத்தில் குதித்த புதுவை காங்கிரஸ் கட்சியினர்...!
புதுச்சேரியில் தேர்தல் ஆணையத்துக்கு பாடை கட்டி காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி என்பது மிகவும் முக்கியமான ஒன்று. இறந்தவர்கள், மாற்று இடத்திற்கு சென்றவர்கள், புதியவர்கள் என பல்வேறு விஷயங்களை கருத்தில் கொண்டு பெயர் திருத்தம், முகவரி மாற்றம் என திருத்தப் பணிகள் நடைபெறுவது வழக்கம்.
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியை தமிழகம் உள்ளிட்ட மாநிலங்கள் எதிர்கின்றன. காரணம் தேர்தல் ஆணையம் பாஜக அரசுக்கு துணையாக செயல்படுவதாகவும் வாக்காளர் திருத்த பணிகள் மூலம் பொதுமக்களின் வாக்குரிமை பறிக்கப்படும் என்ற குற்றம் சாட்டி வருகின்றனர். வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணி இரண்டாம் கட்டமாக 12 மாநிலங்களில் நடத்தப்பட உள்ளதாக தலைமை தேர்தல் ஆணையர் தெரிவித்தார். தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் நடைபெற்று வருகிறது.
எஸ் ஐ ஆர் படிவங்கள் நிரப்புவதில் பல்வேறு சந்தேகங்கள் மக்களுக்கு எழுந்துள்ளது. என்னென்ன நிரப்ப வேண்டும், எப்படி நிரப்ப வேண்டும் உள்ளிட்டவை தொடர்பாக பல்வேறு குழப்பங்கள் நிலவி வருகின்றன. எஸ் ஐ ஆர் படிவத்தில் பல்வேறு குளறுபடிகள் இருப்பதாகவும் குற்றம் சாட்டப்பட்ட வருகிறது. போதுமான விளக்கம் கொடுக்கப்படாததால் படிவங்கள் நிரப்புவதில் மக்கள் சிரமத்தை சந்திக்கின்றனர். சிறப்பு வாக்காளர் திருத்தத்தை அவசர அவசரமாக நடத்த வேண்டியதன் காரணம் என்ன என்ற கேள்விகளை முன்வைக்கப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: வடமாநில தொழிலாளர்களுக்கு வாக்குரிமை... பாஜகவின் சதித்திட்டம்... அம்பலப்படுத்தும் செல்வப் பெருந்தகை...!
இந்த நிலையில் புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சியினர் தேர்தல் ஆணையத்துக்கு பாடை கட்டி போராட்டம் நடத்தினர். பாடையை எடுத்துச் சென்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடம் முயற்சித்தனர். போலீசார் போராட்டக்காரர்களை தடுத்து நிறுத்தினர். தடுப்புகள் அமைத்து அனைவரும் தடுத்து நிறுத்தப்பட்டனர். இதை எடுத்து அந்த இடத்திலேயே அமர்ந்து காங்கிரஸ் கட்சியினர் போராடினர். காங்கிரஸ் கட்சியினரை அப்புறப்படுத்த போலீசார் முற்பட்டபோது தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பிறகு போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் வலுக்கட்டாயமாக குண்டு கட்டாக தூக்கிச் சென்று வாகனத்தில் ஏற்றிச் சென்றனர். பாஜகவுக்கு ஆதரவாக தேர்தல் ஆணையம் தொடர்ந்து செயல்பட்டு வருவதாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குற்றம் சாட்டினர்.
இதையும் படிங்க: 100 நாள் வேலை திட்டம்... 27 லட்சம் பேர் நீக்கம்? ஜெய்ராம் ரமேஷ் பகீர் குற்றச்சாட்டு..!