WE MISS YOU JADDU..! ராஜஸ்தான் அணிக்கு ஜடேஜா மாற்றம்... ரசிகர்கள் வருத்தம்... சிஎஸ்கே நிர்வாகம் விளக்கம்...!
பிரபல கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜா ராஜஸ்தான் அணிக்கு மாற்றப்பட்டுள்ளார்.
டி20 கிரிக்கெட் மிகவும் பிரபலமானது. அதிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் அணி வெறும் பெயராக இல்லாமல் சென்னை மக்களின் உணர்வாக கலந்தது. சென்னை மட்டுமல்லாது பல்வேறு மாநில மக்களும் சென்னை அணியின் ரசிகர்களாக இருப்பது உண்டு. சிஎஸ்கே என்றால் தோனி என்பது தான் அனைவரும் கூறுவது. அதற்கு அடுத்தபடியாக சுரேஷ் ரெய்னா, ஜடேஜா, அஸ்வின் என பல வீரர்களது பெயர்களை கூறுவார்கள். அதிலும் ஜடேஜா விற்கு ஃபேன்ஸ் அதிகம் என்றே சொல்லலாம். போட்டியின் போது ஜடேஜா செய்யும் முகபாவனைகள், கிரிக்கெட் மட்டையை சுழற்றும் செயல் என அனைத்தும் மக்களை கவரும் வகையில் அமைந்துள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் என்றாலே மஞ்சள் ரசிகர்களின் மனதில் முதலில் நிழலாடுவது எம்.எஸ். தோனி என்றாலும், அடுத்தடுத்து வரும் பிம்பம் ரவீந்திர ஜடேஜாவின் மின்னல் வேகமான ஃபீல்டிங், அசாத்தியமான த்ரோக்கள், சுழலில் மயக்கும் பந்துவீச்சு, மேலும் அவ்வப்போது பவுண்டரிகளால் மைதானத்தை அதிர வைக்கும் பேட்டிங். 2012-இல் சி.எஸ்.கே.விற்கு வந்த பிறகு, ஜடேஜா அணியின் முகமாகவே உருவெடுத்துவிட்டார். அவர் விளையாடும் போது மைதானத்தில் எழும் ஜடேஜா… ஜடேஜா… கோஷம் சென்னை ரசிகர்களின் அன்பையும், அவரது தாக்கத்தையும் உரக்கச் சொல்கிறது.குஜராத்தின் ஜாம்நகர் மாவட்டத்தில் 1988-இல் பிறந்த ஜடேஜா, சவுராஷ்டிரா அணிக்காக உள்ளூர் கிரிக்கெட்டில் அறிமுகமானார்.
2008-இல் இந்திய அணியில் இடம்பிடித்த அவர், 2009 ஐ.பி.எல். தொடக்கத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இடம்பெற்றார். ஷேன் வார்னின் வழிகாட்டுதலில் அவர் ஒரு ஆல்-ரவுண்டராக மெருகேறினார். ஆனால் உண்மையான திருப்புமுனை 2012-இல் சி.எஸ்.கே. அணி அவரை 9.2 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்த போதுதான். தற்போது ரவீந்திர ஜடேஜா ராஜஸ்தான் அணிக்கு மாற்றப்பட்டுள்ளார். இது அவரது ரசிகர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தியது. இந்த நிலையில்,
இதையும் படிங்க: ஜப்பானுக்கு யாரும் போகாதீங்க..!! சீன அரசு வார்னிங்..!! காரணம் இதுதான்..!!
ராஜஸ்தான் அணிக்கு ரவீந்திர ஜடேஜா மற்றும் ஷாம்கரன் வழங்கப்பட்டது தொடர்பாக சிஎஸ்கே நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. ரவீந்திர ஜடேஜா மற்றும் ஷாம் கரணின் முழு சம்மதத்துடன் ராஜஸ்தான் அணிக்கு இருவரும் ட்ரேட் செய்யப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிஎஸ்கே அணியில் இருந்து டிரேட் செய்த ஜடேஜாவிற்கு விஜயின் மாஸ்டர் பட பாடலுடன் வீடியோ வெளியிட்டு ராஜஸ்தான் அணி வரவேற்றுள்ளது. என் நெஞ்சில் குடியிருக்கும் அனைத்து தமிழ் மக்களுக்கும் நன்றி என ஜடேஜா கூறும் வீடியோவை வெளியிட்டுள்ளது.
இதையும் படிங்க: அண்ணா பல்கலைக்கழகத்தின் முக்கிய புள்ளிகளுக்கு செக்... லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி ...!