×
 

பிரதமர் மோடி சொல்லியாச்சு.. பாதிக்கும் கீழாக குறைந்த கான்வாய் வாகனங்கள்..!! ராஜ்நாத் சிங் அதிரடி..!!

மத்திய பாதுகாப்பு துறை மந்திரி ராஜ்நாத் சிங் தன்னுடைய பாதுகாப்பு வாகனங்களின் எண்ணிக்கையை பாதிக்கும் கீழாக குறைத்திருக்கிறார்.

மேற்காசியப் பகுதியில் ஏற்பட்டுள்ள பதற்றம் காரணமாக உலகளாவிய எரிபொருள் விலை உயர்வு ஏற்பட்டுள்ள நிலையில், பெட்ரோல்-டீசல் நுகர்வைக் குறைக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். கடந்த பிப்ரவரி இறுதியில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஈரானைத் தாக்கியதைத் தொடர்ந்து, ஹார்மூஸ் ஜலசந்தியை ஈரான் மூடியது. மேலும் அப்பகுதியில் கண்ணிவெடிகளைப் புதைத்து வைத்ததால் சர்வதேச கப்பல் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

நாள்தோறும் நூற்றுக்கும் மேற்பட்ட சரக்கு கப்பல்கள் செல்லும் இந்த முக்கிய ஜலசந்தி மூடப்பட்டதால் உலகளாவிய எண்ணெய் விநியோகச் சங்கிலி தடைபட்டு, பெட்ரோலியப் பொருட்களின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. இந்தியா போன்ற இறக்குமதியைச் சார்ந்த நாடுகளுக்கு இது பெரும் சவாலாக அமைந்துள்ளது. 

இந்நிலையில், பொருளாதாரத்தை வலுப்படுத்தவும், வெளிநாட்டு செலாவணி இருப்பைப் பாதுகாக்கவும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய தருணம் வந்துள்ளதாக பிரதமர் மோடி கூறினார். கடந்த 10-ம் தேதி பேசிய அவர், “எரிபொருள் நுகர்வை முடிந்தவரை குறைத்துக் கொள்ளுங்கள். வீட்டிலிருந்து பணியாற்றுவதை ஊக்குவியுங்கள். ஒரு ஆண்டுக்கு தங்கம் வாங்குவதைத் தவிர்க்கவும்” என்று மக்களிடம் வலியுறுத்தினார்.

இதையும் படிங்க: கான்வாய் வாகனங்கள் பாதியாக குறைப்பு..!! பிரதமர் மோடியின் எரிபொருள் சிக்கன நடவடிக்கை..!!

இந்த வேண்டுகோளுக்கு சொந்த உதாரணமாகவே பிரதமர் செயல்பட்டுள்ளார். தனது சிறப்பு பாதுகாப்புப் படையின் (SPG) வாகனங்கள் எண்ணிக்கையை பாதியாகக் குறைக்க உத்தரவிட்டுள்ளார். இருப்பினும், பாதுகாப்பு தர நிலைகளில் எவ்வித சமரசமும் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், பாதுகாப்பு வாகனங்களில் மின்சார வாகனங்களை அதிக அளவில் பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. புதிய வாகனங்கள் வாங்காமல், தற்போது இருக்கும் வாகனங்களையே மாற்றி அமைத்து பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதேபோன்று, மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் தனது பாதுகாப்பு வாகனங்களின் எண்ணிக்கையை பாதிக்கும் கீழாகக் குறைத்துள்ளார். இந்த நடவடிக்கை மூலம் உயர் அதிகாரிகள் மக்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என்பதை பிரதமர் வலியுறுத்தியுள்ளார். இந்தியா வருடத்துக்கு பல்லாயிரம் கோடி ரூபாய் அளவில் எரிபொருள் இறக்குமதி செய்கிறது. உலக சந்தையில் விலை உயர்வு ஏற்பட்டால் அது பணவீக்கத்தை அதிகரிக்கும் மற்றும் ரூபாய் மதிப்பை பாதிக்கும்.

எனவே, ஒவ்வொரு குடும்பமும் எரிபொருளை சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டியது அவசியம் என்று பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். பிரதமரின் இந்த அறிவுறுத்தல் தற்போது அரசு துறைகள், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளிடையே செயல்படுத்தப்பட்டு வருகிறது. மின்சார வாகனங்களை ஊக்குவிப்பதன் மூலம் சுற்றுச்சூழல் பாதுகாப்புடன் பொருளாதார சேமிப்பையும் அடைய முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நடவடிக்கைகள் மூலம் இந்தியப் பொருளாதாரம் வலுவான அடித்தளத்தைப் பெறும் என்று அரசு வட்டாரங்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளன.

இதையும் படிங்க: கான்வாய் வாகனங்கள் பாதியாக குறைப்பு..!! பிரதமர் மோடியின் எரிபொருள் சிக்கன நடவடிக்கை..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share