×
 

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் எதிரொலி... டெல்லியில் அனைத்து கட்சி கூட்டம்..! முக்கிய விவாதம்...!

நாளை நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்க இருக்கும் நிலையில் இன்று அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறுகிறது.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை தொடங்கவுள்ளது. இந்தக் கூட்டத்தொடர் இந்திய நாடாளுமன்றத்தின் மிக முக்கியமான அமர்வுகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. ஏனெனில், இதில் மத்திய அரசின் நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுவதோடு, அரசின் கொள்கை முன்னுரிமைகள், செலவினத் திட்டங்கள் மற்றும் வரி மாற்றங்கள் குறித்து விரிவான விவாதங்கள் நடைபெறும்.

இந்தக் கூட்டத்தொடரைத் தொடங்குவதற்கான அனுமதியை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, மத்திய அரசின் பரிந்துரையின் பேரில் வழங்கியுள்ளார். இதை மத்திய நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் கிரேன் ரிஜிஜு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். கூட்டத்தொடர் இரு கட்டங்களாக நடைபெறும். முதல் கட்டம் ஜனவரி 28 முதல் பிப்ரவரி 13 வரை நீடிக்கும். அதன் பிறகு ஒரு இடைவெளிக்குப் பிறகு, இரண்டாவது கட்டம் மார்ச் 9-ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 2-ஆம் தேதி வரை தொடரும்.

மொத்தம் சுமார் 30 நாட்கள் நாடாளுமன்ற அமர்வுகள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. கூட்டத்தொடரின் முதல் நாளான நாளையதினம், லோக்சபா மற்றும் ராஜ்யசபா உறுப்பினர்கள் இருவரும் இணைந்து கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரையாற்றுவார். இந்த உரை அரசின் ஆண்டு முழுவதற்கான கொள்கை நோக்கங்கள், சட்டத் திட்டங்கள் மற்றும் முன்னுரிமைப் பணிகளை விளக்கும். இதைத் தொடர்ந்து, உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் இரு அவைகளிலும் நடைபெறும்.

இதையும் படிங்க: மிக பெருமை..! ஆப்ரேஷன் சிந்தூர்... வெற்றியை காட்சிப்படுத்திய அலங்கார ஊர்தி..!

இந்த விவாதத்தில் எதிர்க்கட்சிகள் அரசின் கொள்கைகள், பொருளாதார நிலைமை மற்றும் ஆளுமை தொடர்பான பல்வேறு விஷயங்களை எழுப்பி விவாதிப்பார்கள். பட்ஜெட் தொடர்பான மிக முக்கியமான நிகழ்வு பிப்ரவரி 1-ஆம் தேதி நடைபெறும். அன்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் 2026-27-ஆம் நிதியாண்டுக்கான ஒன்றிய பட்ஜெட்டை லோக்சபாவில் தாக்கல் செய்வார்.  நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை தொடங்க இருக்கும் நிலையில் டெல்லியில் இன்று அனைத்து கட்சி கூட்டம் தொடங்கியது. நாடாளுமன்ற கூட்டத்தொடரில் விவாதிக்க உள்ள முக்கிய பிரச்சனைகள் சட்ட மசோதா மற்றும் அவை சமூகமாக நடத்துவது குறித்து விவாதிக்கப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க: முதன்முறையாக குடியரசு தின விழாவில் விலங்குகள் அணிவகுப்பு..! தமிழ்நாட்டு ரக நாய்கள் பங்கேற்பு..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share