×
 

கெஜ்ரிவாலுக்கு தொடரும் சிக்கல்! கோரிக்கை நிராகரிப்பு! டெல்லி மதுபான கொள்கை வழக்கில் பரபரப்பு!

சி.பி.ஐ., தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனு விசாரணையை வேறு நீதிபதிக்கு மாற்ற டெல்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனுவை, டெல்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி நிராகரித்தார்.

டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் முக்கிய திருப்பம்! டெல்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி டி.கே. உபாத்யாயா, முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனுவை நிராகரித்தார். சிபிஐ தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு விசாரணையை நீதிபதி ஸ்வர்ண காந்தா சர்மாவிடமிருந்து வேறு நீதிபதிக்கு மாற்ற வேண்டும் என கோரிய மனு இதுவாகும்.

2021-ல் டெல்லி அரசு அறிவித்த புதிய மதுபானக் கொள்கையில் பெரும் முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. அப்போதைய துணைநிலை கவர்னர் வினய் குமார் சக்சேனா, பழைய கொள்கையே தொடரும் என அறிவித்து, விசாரணைக்கு சிபிஐ-யை உத்தரவிட்டார். சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை (ED) வழக்கு பதிவு செய்து, கெஜ்ரிவால் உட்பட 21 பேரை கைது செய்தன. ஆனால், பிப்ரவரி 27, 2026 அன்று விசாரணை நீதிமன்றம் அனைவரையும் விடுதலை செய்து உத்தரவிட்டது.

இதை எதிர்த்து சிபிஐ உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த மனு நீதிபதி ஸ்வர்ண காந்தா சர்மா முன்பு மார்ச் 9-ம் தேதி விசாரணைக்கு வந்தது. நீதிபதி பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை மார்ச் 16-க்கு ஒத்திவைத்தார்.

இதையும் படிங்க: கெஜ்ரிவால் விடுதலைக்கு எதிர்ப்பு!! கட்டம் கட்டும் சிபிஐ!! மனுவை விசாரணைக்கு ஏற்றது டெல்லி ஹைகோர்ட்!!

இதனிடையே, கெஜ்ரிவால் உள்ளிட்டோர் மார்ச் 11-ம் தேதி தலைமை நீதிபதியிடம் மனு அளித்து, "நீதிபதி ஸ்வர்ண காந்தா சர்மாவிடம் இருந்து வழக்கை மாற்ற வேண்டும்" என கோரினர்.

தலைமை நீதிபதி உபாத்யாயா இந்த மனுவை நிராகரித்து, "வழக்கு நீதிமன்ற பணிப் பகிர்வு பட்டியல் (ரோஸ்டர்) அடிப்படையில் நீதிபதி ஸ்வர்ண காந்தா சர்மாவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. நிர்வாக ரீதியாக மாற்ற வேண்டிய அவசியம் இல்லை. விசாரணையிலிருந்து விலக வேண்டுமானால், சம்பந்தப்பட்ட நீதிபதிதான் முடிவு எடுக்க வேண்டும்" என தெரிவித்தார்.

இதனால், சிபிஐ-யின் மேல்முறையீட்டு மனு இன்று (மார்ச் 16) நீதிபதி ஸ்வர்ண காந்தா சர்மா முன்பு விசாரணைக்கு வருகிறது. கெஜ்ரிவால் தரப்பு இப்போது உச்ச நீதிமன்றத்தை அணுகியுள்ளது. இந்த வழக்கு டெல்லி அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விடுதலை உத்தரவுக்கு எதிரான சிபிஐ மேல்முறையீடு என்ன முடிவுக்கு வரும் என அனைவரும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

இதையும் படிங்க: கெஜ்ரிவால் நிம்மதிக்கு ஆப்பு வைக்கும் சிபிஐ!! டெல்லி மதுபான கொள்கை முறைகேடு!! மேல்முறையீடு ட்விஸ்ட்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share