சட்டவிரோதமாக ஊடுருவிய வங்கதேசத்தினர்! டெல்லியில் சல்லடை போட்டு தேடிய போலீஸ்! 25 பேர் கைது!
டெல்லியில் சட்ட விரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தினர் 25 பேரை அம்மாநில போலீசார் கைது செய்தனர்.
டெல்லி: தலைநகர் டெல்லியில் சட்டவிரோதமாக குடியேறி வசித்து வந்த வங்கதேச நாட்டைச் சேர்ந்த 25 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். போலி ஆவணங்களைப் பயன்படுத்தி உள்ளூர் மக்களுடன் கலந்து வாழ்ந்து வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
வங்கதேசத்தைச் சேர்ந்த சிலர் டெல்லியில் சட்டவிரோதமாக தங்கியிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில் டெல்லி போலீசார் பல்வேறு பகுதிகளில் அதிரடி சோதனை நடத்தினர். சோதனையின்போது சட்டவிரோதமாக வசித்து வந்தவர்களை போலீசார் கண்டறிந்தனர். அவர்களிடம் இருந்த ஆவணங்களை சோதனை செய்தபோது, போலி ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை போன்ற இந்திய அடையாள ஆவணங்கள் இருந்தது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து, வங்கதேசத்தைச் சேர்ந்த 25 நபர்களை போலீசார் கைது செய்தனர். கைதானவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அவர்கள் உள்ளூர் மக்களுடன் கலந்து, சட்டவிரோதமாக வேலை செய்து வாழ்ந்து வந்ததாக போலீசார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து பல போலி இந்திய அடையாள ஆவணங்கள் மீட்கப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: வங்கதேசம் தான் பிரச்னை! சீனா இல்லை! ஊடுருவல்கள் குறித்து மத்திய அரசு தகவல்!!
இதுதொடர்பாக டெல்லி போலீசார், "சட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க தொடர்ந்து கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. கைது செய்யப்பட்டவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு, விசாரணை முடிந்த பிறகு அவர்கள் வங்கதேசத்துக்கு நாடு கடத்தப்படுவார்கள்" என்று தெரிவித்தனர்.
கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவில், குறிப்பாக டெல்லி, மேற்கு வங்கம் போன்ற பகுதிகளில் வங்கதேசத்தைச் சேர்ந்தவர்கள் சட்டவிரோதமாக குடியேறுவது அதிகரித்து வருவதாக புகார்கள் எழுந்துள்ளன. போலி ஆவணங்கள் தயாரித்து வேலை தேடுவது, உள்ளூர் மக்களுடன் கலந்து வாழ்வது போன்ற செயல்களால் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படுவதாக அதிகாரிகள் அச்சம் தெரிவிக்கின்றனர். இதனால் போலீசார் தொடர்ந்து சோதனைகளை தீவிரப்படுத்தி வருகின்றனர்.
இந்தக் கைது நடவடிக்கை டெல்லியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: எல்லையை பாதுகாக்க தயாராகும் பெண் சக்திகள்!! உருவாகுது புதிய படை! தயாராகும் பிரத்யேக முகாம்கள்!