×
 

டெல்லியை உலுக்கிய பயங்கரம்! 6 மாடி கட்டடம் திடீரென இடிந்து விழுந்து 6 பேர் பலி! உரிமையாளர் மீது வழக்கு!

மீட்பு பணி தொடர்ந்து நடைபெற்று வருவதால், உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்ற அச்சம் நிலவுகிறது.

புதுடெல்லி: டெல்லியில் 6 மாடி கட்டடம் திடீரென இடிந்து விழுந்ததில் 6 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்து தொடர்பாக கட்டட உரிமையாளர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இடிபாடுகளுக்குள் மேலும் பலர் சிக்கியிருக்கலாம் என்ற அச்சம் இருப்பதால் மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

தென்மேற்கு டெல்லியில் உள்ள சத்யா நிகேதன் பகுதியில் நேற்று மதியம் சுமார் 1.30 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. கல்வி நிறுவனங்கள் அதிகம் உள்ள பகுதி என்பதால், இடிந்து விழுந்த கட்டடம் மாணவர்கள் தங்கும் மாதாந்திர கட்டண விடுதியாக பயன்படுத்தப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால், கட்டடத்துக்குள் மாணவர்கள் உள்ளிட்ட பலர் இருந்திருக்கலாம் என முதற்கட்ட தகவல்கள் வெளியாகின. சுமார் 50 பேர் வரை இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என்ற அச்சம் ஏற்பட்டதால், தீயணைப்புத்துறையினர் மற்றும் மீட்புப் படையினர் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்பு பணிகளை தொடங்கினர்.

இதையும் படிங்க: டெல்லி மெட்ரோவில் பிரதமர் மோடி பயணம் வைரல்! குழந்தைகளுடன் நடந்த சுவாரஸ்ய உரையாடல்!

இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ளதாக டெல்லி போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் 5 பேர் இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மீட்பு பணி தொடர்ந்து நடைபெற்று வருவதால், உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்ற அச்சம் நிலவுகிறது.

விபத்து நடந்த இடத்தை டெல்லி முதல்வர் ரேகா குப்தா நேரில் பார்வையிட்டு, மீட்பு பணிகளை ஆய்வு செய்தார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களையும் அவர் சந்தித்தார். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் மீட்பு நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். பிரதமர் மோடி, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி உள்ளிட்டோர் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.

சுமார் 40 முதல் 50 ஆண்டுகள் பழமையான இந்த கட்டடத்தின் கீழ்தளத்தில் பழுதுபார்க்கும் பணிகள் நடைபெற்று வந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கும் கட்டடம் இடிந்து விழுந்ததற்கும் தொடர்பு உள்ளதா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இதனிடையே, கட்டடம் சரிந்து விழும் காட்சிகள் அடங்கிய சிசிடிவி வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

இதையும் படிங்க: மீண்டும் நிர்பயா!! டெல்லியில் ஓடும் பஸ்சில் 16 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை! டிரைவர், உதவியாளர் கைது!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share