×
 

டெல்டாவில் இன்றுடன் ஓய்கிறது மழை! தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் குட்நியூஸ்!

பொங்கல் பண்டிகையின் போது பெரிய அளவில் மழை பாதிப்பு இருக்காது என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

டெல்டா மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்களில் பெய்து வரும் கனமழை இன்று நண்பகலுடன் படிப்படியாகக் குறைந்து முற்றிலும் நின்றுவிடும் என தனியார் வானிலை ஆய்வாளர் ‘தமிழ்நாடு வெதர்மேன்’ பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக நீடித்து வந்த பருவம் தவறிய மழை, தற்போது அதன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. குறிப்பாக, டெல்டா மாவட்டங்களில் நேற்று முதல் பெய்து வரும் மழையினால் பொங்கல் அறுவடைப் பணிகள் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், வெதர்மேனின் இந்த அறிவிப்பு விவசாயிகளுக்குப் பெரும் நிம்மதியை அளித்துள்ளது. இன்று மாலை முதல் தமிழகத்தில் மழையின் தாக்கம் குறைந்து, வறண்ட வானிலை தொடங்கும் என அவர் கணித்துள்ளார்.

தனது சமூக வலைதளப் பக்கத்தில் வானிலை அப்டேட் கொடுத்துள்ள பிரதீப் ஜான், "டெல்டா மாவட்டங்களில் இன்று மதியத்திற்கு மேல் மழைக்கான வாய்ப்பு குறைவு. தெற்கு மற்றும் மேற்குத் தமிழகத்தின் ஒருசில இடங்களில் மட்டும் இன்று ஆங்காங்கே மழை பெய்யக்கூடும். இதுவே இந்த வாரத்தின் கடைசி மழையாக இருக்கும்" எனக் குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம், ஜனவரி 14-ஆம் தேதி போகி பண்டிகை மற்றும் ஜனவரி 15-ஆம் தேதி பொங்கல் திருநாளில் தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் மழை குறுக்கீடு இன்றி வறண்ட மற்றும் இனிமையான வானிலை நிலவும் என்பது உறுதியாகியுள்ளது.

இதையும் படிங்க: "ஹேப்பி பொங்கல்.. போகிக்கும் லீவு கொடுத்தாச்சு! ஜனவரி 14 முதல் 18 வரை பள்ளிகள் விடுமுறை! தமிழக அரசு அதிரடி!

வானிலை ஆய்வு மையத்தின் தகவல்களும் இதனையே உறுதிப்படுத்துகின்றன. ஜனவரி 15 முதல் 18 வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலையே நிலவக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மழையின் தாக்கம் குறைவதால், இரவு நேரங்களில் பனியின் தாக்கம் சற்று அதிகரித்து, அதிகாலையில் குளுமையான சூழல் நிலவும். அதே சமயம், தென்தமிழகக் கடலோரப் பகுதிகளில் மட்டும் இன்று லேசான மழைக்குச் சாத்தியக்கூறுகள் உள்ளன. ஒட்டுமொத்தமாகப் பார்த்தால், பொங்கல் பண்டிகையை மக்கள் உற்சாகமாகத் கொண்டாட வானிலை மிகவும் சாதகமாக மாறியுள்ளது.


 

இதையும் படிங்க: #BREAKING:"சிபிஐ விசாரணையில் ட்விஸ்ட்!"  பொங்கல் வருது.. அப்புறம் வர்றேன்"  விஜய்யின் கோரிக்கைக்கு ஓகே சொன்ன அதிகாரிகள் !

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share