அரசு காரில் போய் சொகுசு காரில் வந்தீங்களே! என்ன இபிஎஸ் இதெல்லாம்? விளாசிய திமுக
அரசு காரில் போய் சொகுசு காரில் வந்ததன் பின்னணி என்ன என திமுக ஐடி விங் கேள்வி எழுப்பிள்ளது.
டெல்லிக்குச் சென்ற எடப்பாடி பழனிச்சாமி உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தார். பிறகு வெளியே வரும்போது முகத்தை மூடி கொண்டதாக தகவல்கள் பரவின. தான் முகத்தை தான் துடைத்ததாகவும் அதற்குள் அவதூறு பரப்புவதாகவும் எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டினார். ஒரு கட்சியின் பொதுச்செயலாளர் என்று கூட பாராமல் இவ்வாறு அவதூறு பரப்புவது சரியல்ல என்றும் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருந்தார் ஈபிஎஸ். இந்த நிலையில் அரச வாகனத்தில் சென்று விட்டு எப்படி சொகுசு காரில் வந்தார் என்ற கேள்வியை திமுக முன்வைத்துள்ளது.
வெள்ளை அரசு வாகனத்தில் சென்றதாக சொல்லும் இபிஎஸ், திரும்பி வரும்போது எப்படி ரூ.8 கோடி மதிப்புள்ள DL 2 CAN 9009 பதிவெண் கொண்ட சொகுசு காரில் வந்தார் என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. டெல்லிக்கு செல்லும் போதெல்லாம் பல கார்களில் மாறி மாறி மறைந்தே போகும் மர்மம் என்ன என்றும் திமுக கேள்வி எழுப்பியுள்ளது. காரில் இபிஎஸ் உடன் இருப்பவர் யார் என்றும் ஏன் இபிஎஸ் முகத்தை மறைக்க வேண்டும் எனவும் அடுக்கடுக்கான கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன.
கட்சி சந்திப்பு என்றால் கட்சியினரும், தனிப்பட்ட சந்திப்பு என்றால் குடும்பத்தினரும் இருக்கலாம்., ஆனால் அமித்ஷா இல்லத்தில் இருந்து வெளியே வந்த காரில் பழனிசாமி உடன் இருந்தது யார் என்ற சந்தேகத்தையும் திமுக எழுப்பி உள்ளது.
இதையும் படிங்க: FOOTAGE-ல் அப்படி தெரிஞ்சுருக்கு... இபிஎஸ்-ஐ விட்டுக் கொடுக்காத அண்ணாமலை..!
மேலும், அமைச்சருக்கு நிகரான கண்ணியமிக்க எதிர்க்கட்சித் தலைவர் பொறுப்பில் உள்ள எடப்பாடி பழனிச்சாமி, முகத்தை மறைத்து அமித்ஷா இல்லத்திலிருந்து வெளியேறுவது ஏன் என்றும் என்ன அவசியம்., என்ன நிர்பந்தம் என சரமாரி கேள்விகளை முன் வைத்துள்ளது.
இதையும் படிங்க: எங்கள பத்தி பேச திமுகவுக்கு அருகதை இல்ல... லிஸ்ட் போட்டு சாட்டையை சுழற்றிய இபிஎஸ்