×
 

சிலிண்டர் தட்டுப்பாடு! தமிழகம் முழுவதும் திமுக கூட்டணி ஆர்ப்பாட்டம்!

சென்னை, திருச்சி, மதுரை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட் மற்றும் மதிமுக நிர்வாகிகள் காலி சிலிண்டர்களைச் சுமந்தபடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேற்கு ஆசியப் போர்ச் சூழலால் ஏற்பட்டுள்ள சமையல் எரிவாயு (LPG) தட்டுப்பாட்டைக் கையாளத் தவறிய ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்து, திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி (SPA) இன்று தமிழகம் முழுவதும் பிரம்மாண்ட போராட்டங்களை நடத்தியது.

சென்னை, திருச்சி, மதுரை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட் மற்றும் மதிமுக நிர்வாகிகள் காலி சிலிண்டர்களைச் சுமந்தபடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். எங்கே போனது சிலிண்டர்?, மக்களை வஞ்சிக்காதே ஒன்றிய அரசே!" போன்ற முழக்கங்கள் விண்ணைப் பிளந்தன.

தமிழக அமைச்சரவையில் உள்ள 31 அமைச்சர்கள் அந்தந்த மாவட்டங்களில் இந்தப் போராட்டத்திற்குத் தலைமை தாங்கினர். சென்னையில் நடைபெற்ற போராட்டத்தில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர் பாபு மற்றும் கூட்டணிக் கட்சித் தலைவர்களான கே.வீரமணி (திக), செல்வப்பெருந்தகை (காங்கிரஸ்), திருமாவளவன் (விசிக) உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதையும் படிங்க: பூதாகரமாகும் கேஸ் தட்டுப்பாடு பிரச்சனை..!! பெங்களூருவில் ஒரே நாளில் 25% ஓட்டல்கள் மூடல்..!!

சர்வதேசச் சூழலை உணர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க ஒன்றிய அரசு தவறிவிட்டது. இதனால் ஹோட்டல்கள், பேக்கரிகள் மூடப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. பொதுமக்களின் சமையலறைகள் முடங்கியுள்ளன எனப் போராட்டத்தின் போது தலைவர்கள் குற்றம் சாட்டினர்.

எரிவாயு தட்டுப்பாடு மட்டுமின்றி, கோயம்புத்தூர் மற்றும் மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு அனுமதி வழங்காதது மற்றும் கல்விக்கான நிதி ஒதுக்கீட்டை நிறுத்தி வைத்திருப்பது போன்ற விவகாரங்களையும் முன்வைத்து ஒன்றிய அரசுக்கு எதிராகத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் டெல்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகியுள்ள இதே நாளில், மாநிலம் தழுவிய இந்தப் போராட்டம் தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தட்டுப்பாட்டைச் சமாளிக்கத் தமிழக அரசு ஏற்கனவே மின்சார மானியம் மற்றும் மாற்று எரிபொருள் திட்டங்களை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: சிலிண்டர் தட்டுப்பாடு: மத்திய அரசின் விரைவான நடவடிக்கை தேவை..!! கனிமொழி எம்.பி வலியுறுத்தல்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share