×
 

#BREAKING: மாநிலங்களவையில் திமுக எம்.பிக்கள் தமிழில் பதவியேற்பு..!

புதிதாக தேர்வு செய்யப்பட்ட திமுக மாநிலங்களவை உறுப்பினர்கள் இன்று தமிழில் பதவியேற்றனர்.

திமுக கூட்டணி சார்பில் தேர்வு செய்யப்பட்ட மாநிலங்களவை உறுப்பினர்கள் நான்கு பேரும் இன்று தமிழில் பதவியேற்றுக்கொண்டனர். தமிழ்நாட்டில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்வான ஆறு உறுப்பினர்களின் பதவி காலம் முடிவடைந்தது. பாமகவின் அன்புமணி ராமதாஸ், திமுகவின் எம்.சண்முகம், முகமது அப்துல்லா, பி.வில்சன், அதிமுகவின் என்.சந்திரசேகரன், மதிமுகவின் வைகோ ஆகியோரின் பதவிக் காலம் நிறைவடைந்தது.

ஜூன் 19ஆம் தேதி மாநிலங்களவை தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தபோது, திமுக சார்பில் வில்சன், சல்மா,சிவலிங்கம் ஆகியோர் மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட்டனர். மேலும் மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட திமுக கூட்டணியில் உள்ள மக்கள் நீதி மையம் ஒரு சீட் ஒதுக்கப்பட்டது. மக்கள் நீதி மையம் சார்பில் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் போட்டியிட்டார். அ.தி.மு.க. சார்பில் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்ட வழக்கறிஞர் பிரிவுச் செயலாளர் இன்பதுரை, செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட அவைத் தலைவர் தனபால் ஆகியோர் வேட்பு மனுத்தாக்கல் செய்தனர்.

இவர்கள் தவிர்த்து ஏழு சுயேட்சை வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்தனர். மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்ற நிலையில், திமுக மற்றும் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் மனுக்களும், கமல்ஹாசனை மனுவும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. சுயேச்சை வேட்பாளர்கள் அனைவரது மனுக்களும் நிராகரிக்கப்பட்டது. இதன் மூலம் திமுக, அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் ஆறு பேரும் போட்டி இன்றி தேர்வாகினர். மாநிலங்களவைக்கு தேர்வான ஆறு பேரும் இன்று பதவியேற்றனர். 

இதையும் படிங்க: எழுதி கொடுத்து படிக்க ஸ்டாலினா? மனசுல பட்டத பேசுற இபிஎஸ்! வலுக்கும் விமர்சனங்கள்

மாநிலங்களவையில் முதன்முதலாக கால் பதிக்கும் கமல்ஹாசன் தமிழில் பதவியேற்றார். அவரைத் தொடர்ந்து, திமுக எம்பிக்கள் மூன்று பேரும் பதவியேற்றனர். வில்சன், கவிஞர் சல்மா, சிவலிங்கம் ஆகியோர் பதவியேற்று ஆவணங்களில் கையெழுத்து இட்டதுடன் சபாநாயகரிடம் வாழ்த்து பெற்றனர். 

இதையும் படிங்க: அநாகரீகப் பேச்சால் அம்பலப்பட்ட பழனிச்சாமி.. முதல்ல பாலபாடம் படிங்க! திமுக விமர்சனம்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share