திமுகவில் காலியாகும் அடுத்த விக்கெட்?... அறிவாலயத்திற்கு குடைச்சல் தரும் திருமா... மூணு கன்டிஷன்களில் மொத்தமும் காலி...!
மழை நின்றாலும் தூவானம் விடவில்லை என்பது போல் சிபிஐ, சிபிஎம், விசிக மூன்றும் கூடுதல் சீட் கொடுத்தால் மட்டுமே அறிவாலயத்திற்குள் கால் எடுத்து வைப்போம், இல்லையெல் பேச்சுவார்த்தைக்கு கூட வரமாட்டோம் என போர்க்கொடி தூக்கியுள்ளன.
ஐந்து ஆண்டுகளாக ஸ்மூத்தாக சென்று கொண்டிருந்த திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் பயணம் தேமுதிக இணைந்ததில் இருந்தே ரோலர் கோஸ்டர் ரெய்டு போல மாறிவிட்டது. போதாக்குறைக்கு ஆட்சியில் பங்கு, அதிக தொகுதிகள் என காங்கிரஸ் வேறு போர் கொடி தூக்கி நிற்க, அதைப் பார்த்து விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள், மதிமுக, வேல்முருகனின் தமிழக வாழ்வுரிமைக் கட்சி என அனைவரும் டபுள் டிஜிட்டில் தான் சீட் வேண்டும் என அடம்பிடிக்க ஆரம்பித்தனர்.
முதலில் டெல்லி தலைமையிடம் பல கட்ட பேச்சுவார்த்தை காங்கிரஸ் கட்சிக்கு 28 சீட்டுகளைக் கொடுத்து ஆஃப் செய்தது திமுக. "மழை நின்றாலும் தூவானம் விடவில்லை" என்பது போல் சிபிஐ, சிபிஎம், விசிக மூன்றும் கூடுதல் சீட் கொடுத்தால் மட்டுமே அறிவாலயத்திற்குள் கால் எடுத்து வைப்போம், இல்லையெல் பேச்சுவார்த்தைக்கு கூட வரமாட்டோம் என போர்க்கொடி தூக்கின.
பாஜகவை வீழ்த்தி இரண்டாவது முறையாக ஆட்சி அமைக்க வேண்டாமா?, கூட்டணிக்காக கொஞ்சம் விட்டுக்கொடுங்கள். அந்த நஷ்டத்தை வேறு வழியில் சரி கட்டிக்கொள்ளலாம் என சொல்லி, திமுக தொகுதி பங்கீடு குழு சமாதானப்படுத்தியது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் 5 சீட்டுக்கு ஒப்புக்கொண்டார்கள். ஆனால் விசிகவும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டும் தொடர்ந்து முரண்டு பிடித்து வருகிறது.
இதையும் படிங்க: வக்பு வாரிய செயல்பாடுகள் மோசம்!! திமுக மீது முஸ்லிம்கள் அதிருப்தி! சமாதானம் செய்ய முடியாமல் தவிக்கும் மு.க.ஸ்டாலின்!
விசிக தரப்பில், 'எங்கள் கட்சிக்கு இரண்டு எம்.பி.,க்கள், நான்கு எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர்; இந்த தேர்தலில் எட்டு தொகுதிகள் ஒதுக்க வேண்டும்' என வலியுறுத்தப்பட்டது. அதற்கு, 'கூட்டணியில் ஆரம்பம் முதல் நம்பிக்கைக்கு உரியவராக திருமாவளவன் உள்ளார். கூட்டணியில் அதிக கட்சிகள் இணைந்துள்ளன; அவர்களுக்கும் தொகுதிகளை ஒதுக்க வேண்டும். பழைய எண்ணிக்கையில் ஒன்றாவது குறைத்துக் கொள்ளுங்கள் எனகேட்டுக்கொண்டுள்ளனர். அதை, திருமாவளவன் ஏற்கவில்லை.
பின், 'மூன்று பொது தொகுதிகள் உட்பட எட்டு தொகுதிகள் தர வேண்டும்; ஒரு தொகுதியை மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் தர வேண்டும்' என, வி.சி.க தரப்பில் கேட்கப்பட்டுள்ளது.
'சரி தருகிறோம். ஆறு தொகுதிகளில் பானை சின்னத்தில் நிற்கலாம். ஒரு தனி மற்றும் பொது தொகுதியில் மட்டும் உதயசூரியன் சின்னத்தில் நிற்க வேண்டும்' என, தி.மு.க.,வால் நிபந்தனை விதிக்கப்பட்டதாம். அதற்கும் மசியாத திருமா, 'கடந்த தேர்தலில் தான் எங்கள் கட்சிக்கு அங்கீகாரம் கிடைத்தது; எனவே, இந்த தேர்தலில், சொந்த சின்னத்தில் தான் போட்டியிடுவோம்' என கட் அண்ட் கறாராக சொல்லிவிட்டாராம்.
மற்றொருபுறம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டும் இந்திய கம்யூனிஸ்ட் போல நாங்க 5 தொகுதிக்கு ஒத்துக்க மாட்டோம். 6 தொகுதிக்கு மேலான்னா தான் அறிவாலயம் பக்கம் அடியெடுத்தே வைப்போம் என சொல்லிவிட்டார்களாம். அதேபோல் தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகனும் 2 சீட் கொடுக்கவில்லை என்றால் கூட்டணியை விட்டு கழண்டு கொள்வேன் என எச்சரிக்கை விடுத்துள்ளாராம். இதை எல்லாம் பார்க்கும் அரசியல் விமர்சகர்கள் திமுகவில் இருந்து ஒரு வீக்கெட் விழப்போவது கன்பார்ம் என்கிறார்கள்
இதையும் படிங்க: சிங்கிள் டிஜிட் செட்டாகாது! திருமா விடாப்பிடி! இரட்டை இலக்கத்தில் சீட் கேட்கும் விசிக! தொகுதி பங்கீட்டில் இழுபறி!!