#Breaking டெல்லி குண்டு வெடிப்பில் திடுக்கிடும் திருப்பம்... என்.ஐ.ஏ கைக்கு கிடைத்த முக்கிய டி.என்.ஏ ரிப்போர்ட்...!
செங்கோட்டை அருகே வெடித்துச் சிதறிய i20 காரை டாக்டர் உமர் முகமது ஓட்டிச் சென்றதை டி.என்.ஏ. பரிசோதனை முடிவுகள் உறுதிப்படுத்தியுள்ளது.
செங்கோட்டை அருகே வெடித்துச் சிதறிய i20 காரை டாக்டர் உமர் முகமது ஓட்டிச் சென்றதை டி.என்.ஏ. பரிசோதனை முடிவுகள் உறுதிப்படுத்தியுள்ளது.
ஹரியானாவின் ஃபரிதாபாத்தில் உள்ள இரண்டு குடியிருப்பு கட்டிடங்களில் இருந்து ஜம்மு-காஷ்மீர் காவல்துறை கிட்டத்தட்ட 3,000 கிலோ வெடிபொருட்களை மீட்டெடுத்த சில மணி நேரங்களிலேயே, செங்கோட்டை மெட்ரோ நிலையத்தின் கேட் எண் 1 அருகே உள்ள போக்குவரத்து சிக்னலில் நிறுத்தப்பட்டிருந்த ஹூண்டாய் i20 கார் வெடித்து சிதறியது. நாட்டையே உலுக்கிய இந்த குண்டுவெடிப்பில் 12 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.
வழக்கு விசாரணை என்னையே வசம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், தடைசெய்யப்பட்ட அமைப்புகளான ஜெய்ஷ்-இ-முகமது மற்றும் அன்சார் கஸ்வத்-உல்-ஹிந்த் உடன் தொடர்பில் இருந்த மருத்துவரான உமர் என்பவருக்கு சம்பவத்துடன் தொடர்பு இருப்பது கண்டறியப்பட்டது.
இதையும் படிங்க: சிக்கியது முக்கிய ஆதாரங்கள்... டெல்லி கார் குண்டு வெடிப்பில் அதிரடி திருப்பம்...!!
இருப்பினும் இதனை ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க என்னையே அதிகாரிகள் சிசிடிவி காட்சிகள், சம்பவம் நடந்த இடத்தில் சிதறி கிடந்த தடயங்கள் மற்றும் உடல் பாகங்களை சேகரித்து ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். அந்த வகையில் காருக்குள் இருந்து பற்கள் எலும்புகள் உள்ளிட்ட மனித எச்சங்கள் சிலவற்றையும் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில் புல்வாமாவில் உள்ள உமரின் தாய் மற்றும் சகோதரரின் டி.என்.ஏ மாதிரிகள் சேகரிக்கப்பட்டு எய்ம்ஸ் தடயவியல் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டன, அங்கு அவை டெல்லியில் உள்ள லோக் நாயக் மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த எச்சங்களுடன் 100 சதவீதம் பொருந்தியுள்ளதாக மருத்துவர்கள் அறிவித்துள்ளனர். இதன் மூலம் ஹூண்டாய் i20 காரை இயக்கியது உமர் தான் என்பது உறுதியாகியுள்ளது.
டெல்லி செங்கோட்டை அருகே நடந்த பேரழிவுகரமான குண்டுவெடிப்பை நடத்தியவர் காஷ்மீரைச் சேர்ந்த மருத்துவ நிபுணர் டாக்டர் உமர் உன் நபி என்பது டிஎன்ஏ சோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. குண்டுவெடிப்பில் அவரது உடல் சிதறி சிதறியதால், இதுவரை அவர் யார் என்பது புலனாய்வாளர்களுக்கு உறுதியாகத் தெரியாமல் இருந்தது குறிப்பிடத்தக்கது.
ஃபரிதாபாத் கிடங்கில் இருந்து கிட்டத்தட்ட 2,900 கிலோ அம்மோனியம் நைட்ரேட் மீட்கப்பட்ட ஒரு நாளுக்குப் பிறகு, நவம்பர் 9 ஆம் தேதி முதல் உமர் காணாமல் போனதாக போலீசார் தெரிவிக்கின்றனர். அக்டோபர் 30 முதல் அவர் தௌஜ் கிராமத்திற்கு அருகில் தலைமறைவாகி, ஐந்து தொலைபேசிகளை அணைத்துவிட்டு, பல்கலைக்கழக பணிகளுக்கு கூட செல்லாமல் இருந்ததாகவும் அடுத்தடுத்து பகீர் தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இதையும் படிங்க: டெல்லி குண்டுவெடிப்பு எதிரொலி; திருச்செந்தூர் முருகன் கோயிலில் போலீஸ் குவிப்பு...!