×
 

டெல்லி கார்வெடிப்பு!! பாகிஸ்தானுக்கு நேரடி தொடர்பு!! புட்டு புட்டு வைக்கும் உளவுத்துறை ரிப்போர்ட்!

டாக்டர்கள் உமர், முஸாமில் மற்றும் பெண் டாக்டர் ஷாஹீன் ஆகியோருக்கு பாகிஸ்தானில் இருந்து ஹவாலா நெட்வொர்க் மூலம் ஜெய்ஷ் இ முகமது அமைப்பு 20 லட்சம் ரூபாயை அனுப்பி உள்ளது.

இந்தியாவின் 'ஆபரேஷன் சிந்தூர்' ராணுவ நடவடிக்கைக்கு பழிவாங்கும் வகையில், பாகிஸ்தான் சார்ந்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பு இந்தியாவில் தாக்குதல் நடத்த திட்டமிட்டது. இதற்காக டாக்டர்கள் அடங்கிய கும்பல், ஹரியானா மருத்துவப் பல்கலையில் 360 கிலோ வெடிபொருள் பதுக்கியது கண்டுபிடிக்கப்பட்டது. டில்லியில் டிசம்பர் 6-ல் நடக்க இருந்த பெரிய குண்டுவெடிப்பு தடுக்கப்பட்டுள்ளது. தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) மற்றும் மத்திய உளவுத்துறை தீவிர விசாரணை நடத்தி வருகின்றன.

காஷ்மீர் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடந்த பஹல்கம் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7-ல் இந்தியா 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் பாகிஸ்தானில் உள்ள ஜெய்ஷ்-இ-முகமது மற்றும் லஷ்கர்-இ-தொய்பா போன்ற பயங்கரவாத அமைப்புகளின் 9 கேம்புகளைத் தாக்கியது. 

இதில் பயங்கரவாதிகள் 100க்கும் மேற்பட்டோர் இறந்தனர். இந்த நடவடிக்கைக்கு பழிவாங்கும் வகையில், ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பு இந்தியாவில் பெரிய தாக்குதல் திட்டமிட்டது. இதற்காக அக்டோபர் மாதம் காஷ்மீரில் அந்த அமைப்பை ஆதரும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டன.

இதையும் படிங்க: ' ஆப்ரேஷன் ஸ்பெஷலிஸ்ட்' பயங்கரவாதிகளின் சதித்திட்டத்தை முறியடித்த ஐ.பி.எஸ்!! யார் இந்த சந்தீப் சக்கரவர்த்தி?!

இதைத் தொடர்ந்து, காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தைச் சேர்ந்த டாக்டர் ஆதில் என்பவரை போலீஸார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், ஜெய்ஷ்-இ-முகமது அமைப்புடன் தொடர்புடைய மூன்று டாக்டர்கள் தெரியவந்தனர். அவர்கள் காஷ்மீரைச் சேர்ந்த முஸாமில் அகமது கனி, உத்தர பிரதேசத்தின் லக்னோவைச் சேர்ந்த ஷாஹீன் சயீது மற்றும் ஷாஹீன் சயீது ஆகியோர். இவர்கள் மூவரும் ஹரியானாவின் அல்-பலாஹ் மருத்துவப் பல்கலையில் பணியாற்றியவர்கள் என்பது தெரியவந்தது.

விசாரணையில், அந்த பல்கலை வளாகம் அருகில் பதுக்கி வைக்கப்பட்ட 360 கிலோ வெடிபொருள்களையும் போலீஸார் கைப்பற்றினர். இதே பல்கலை டாக்டர் உமர் நபி என்பவருக்கு இவர்களுடன் தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. போலீஸார் அவரை தீவிரமாகத் தேடி வரும்போது, உமர் நபி டில்லியில் வெடிபொருள் நிரப்பப்பட்ட காரை ஓட்டிச் சென்று வெடிக்க முயன்றான். சம்பவம் தொடர்பாக என்.ஐ.ஏ. தீவிர விசாரணை நடத்தி வருகிறது.

மத்திய உளவுத்துறை தனியாக நடத்திய விசாரணையில், முதல் கட்ட அறிக்கை அரசுக்கு அளிக்கப்பட்டது. அதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானன. டாக்டர்கள் உமர், முஸாமில் மற்றும் பெண் டாக்டர் ஷாஹீன் ஆகியோருக்கு, பாகிஸ்தானில் இருந்து ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பு ஹவாலா நெட்வொர்க் மூலம் 20 லட்சம் ரூபாய் அனுப்பியது தெரியவந்தது.

அதைப் பயன்படுத்தி, கள்ளச் சந்தையில் அமோனியம் நைட்ரேட், எரிபொருள் ஆயில் மற்றும் டி.ஏ.டி.பி (டிரைஅசிடோன் டிரைபெராக்சைட்) என்ற வெடிபொருள்களை வாங்கி, குண்டுகளைத் தயாரித்துள்ளனர்.

உளவுத்துறை வட்டாரங்கள் கூறுகையில், “முன்கூட்டியே இந்த கும்பலை காஷ்மீர் போலீஸார் கண்டுபிடித்ததால், டிசம்பர் 6-ல் டில்லியில் நடக்க இருந்த மிகப்பெரிய குண்டுவெடிப்பு தடுக்கப்பட்டது. இந்த சதித்திட்டத்தில் பாகிஸ்தானுக்கு நேரடி தொடர்பு உள்ளது” என்றன. இந்த சதி, 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையின் பழிவாங்கல் என்பதால், இந்திய உளவு அமைப்புகள் தீவிர கண்காணிப்பில் உள்ளன.

இந்த சம்பவம், பயங்கரவாத அமைப்புகளின் உள்நாட்டு சதிகளை வெளிப்படுத்தியுள்ளது. டாக்டர்கள் போன்ற படித்தவர்கள் இதில் ஈடுபடுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. என்.ஐ.ஏ. விசாரணையில் மேலும் விவரங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியா-பாகிஸ்தான் இடையேயான பதற்றம் தொடரும் நிலையில், உளவுத்துறை எச்சரிக்கை தீவிரமாக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: 2900 கிலோ வெடிமருந்து! இந்தியாவுக்கு எதிராக களமிறங்கும் டெல்லி டாக்டர்கள்!! அதிர வைக்கும் 2 சம்பவங்கள்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share