முக்கிய ஆவணங்கள் திருட்டு.. போலீஸ் விசாரணை வளையத்துக்குள் ராஜ்பவன் ஊழியர்கள்!
தெலங்கானா ஆளுநர் மாளிகையில் முக்கிய ஆவணங்கள் திருடு போய் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தெலங்கானா ஆளுநர் மாளிகையில் முக்கிய ஆவணங்கள் திருடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நான்கு ஹார்ட் டிஸ்க்குகள் காணாமல் போய் உள்ளதாகவும், சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது ஹெல்மெட் அணிந்து வந்த மர்ம நபர் ஒருவர் திருடி உள்ளதாகவும் போலீசார் கூறியுள்ளனர்.
கடந்த 14ஆம் தேதி சுதர்மா பவனில் உள்ள முதல் மாடியில் கணினி அறைக்கு அந்த மர்ம நபர் வந்து சென்றுள்ளதாகவும், ஆய்வில் நான்கு ஹார்ட் டிஸ்க்குகள் காணாமல் போய் உள்ளதை கண்டு அதிர்ச்சி அடைந்ததாகவும் தெரிவித்துள்ளனர். பொருட்கள் கலைந்து கிடந்ததால் ராஜ் பவன் அதிகாரிகள் சந்தேகத்தின் பேரில் ஆய்வு முக்கிய ஆவணங்கள் திருட போய் உள்ளது தெரிய வந்துள்ளது..
இதையும் படிங்க: எதிர்பாரா துயரச்சம்பவம்..! ஹைதராபாத் தீ விபத்தில் இறந்தவர்களுக்கு ரூ.2 லட்சம் நிவாரணம்.. பிரதமர் இரங்கல்..!
இந்த நிலையில் ராஜ் பவனில் பணியாற்றும் ஊழியர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பலத்த பாதுகாப்பு மிகுந்த ஆளுநர் மாளிகைக்குள் நுழைந்து ஆவணங்கள் திருடப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: ஹைதராபாத் குடியிருப்பு பகுதியில் பயங்கர தீ விபத்து.. 17 பேர் உயிரிழந்த சோகம்..!