×
 

எதிர்பாரா துயரச்சம்பவம்..! ஹைதராபாத் தீ விபத்தில் இறந்தவர்களுக்கு ரூ.2 லட்சம் நிவாரணம்.. பிரதமர் இரங்கல்..!

ஹைதராபாத் தீ விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்ததுடன் நிவாரணத் தொகையும் அறிவித்துள்ளார்.

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் சார்மினார் பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதி ஒன்றில் ஏசி வெடித்து திடீர் தீ விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்து சென்ற தீயணைப்புத் துறையினர், மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த தீ விபத்து சம்பவத்தில் சிக்கி 17 பேர் உயிரிழந்தனர்.

மின்சார ஷார்ட் சர்க்யூட் காரணமாக தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இதனையடுத்து மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி உள்ளிட்டோர் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.

இதையும் படிங்க: பலூசிஸ்தானில் இந்தியாவுக்கும் பிரதமர் மோடிக்கும் அதிகரிக்கும் ஆதரவு.. சோஷியல் மீடியாவில் பலூச் படையினர் வெறித்தனம்!

இந்த நிலையில் ஹைதராபாத் தீ விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் இறந்தவர்களுக்கு தலா இரண்டு லட்ச ரூபாய் நிவாரணமும், காயமடைந்தவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

இதையும் படிங்க: தீவிரவாதத்தையும் பேச்சுவார்த்தையையும் ஒன்னா நடத்த முடியாது.. பாகிஸ்தானை விளாசி தள்ளிய பிரதமர் மோடி!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share