×
 

அமலாக்கத்துறை சோதனைக்கு எதிர்ப்பு!! அமித் ஷா வீட்டு முன் போராடிய எம்.பிக்கள்! குண்டுகட்டாக கைது!!

மேற்கு வங்கத்தில் அமலாக்கத்துறை நடத்திய சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வீட்டின் முன்பு திரிணமுல் காங்கிரஸ் எம்பிக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

டெல்லி: மேற்கு வங்கத்தில் அமலாக்கத்துறை (இடி) நடத்திய சோதனையை கண்டித்து, திரிணமுல் காங்கிரஸ் (டிஎம்சி) எம்பிக்கள் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தினர். இதில் ஈடுபட்ட மஹுவா மொய்த்ரா, டெரிக் ஓ பிரைன் உள்ளிட்ட எம்பிக்களை டெல்லி போலீசார் குண்டுக்கட்டாக தூக்கிச் சென்று கைது செய்தனர். இந்த சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று (ஜனவரி 8) மேற்கு வங்கத்தில் திரிணமுல் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் வியூகங்களை வகுக்கும் ஐ-பேக் (I-PAC) நிறுவனத்தின் அலுவலகங்களிலும், அதன் இயக்குநரும் கட்சியின் ஐடி விங் தலைவருமான பிரதிக் ஜெயின் வீட்டிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

இந்த சோதனையின் போது மேற்கு வங்க முதல்வரும் திரிணமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி நேரில் சென்று தலையிட்டார். அங்கு இருந்த மொபைல் போன், லேப்டாப், சில ஆவணங்கள் ஆகியவற்றை எடுத்துச் சென்றதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: அரசு வேலை வாங்கி தருவதாக மோசடி!! சினிமாவை மிஞ்சும் சதித்திட்டம்! 6 மாநிலங்களில் அமலாக்கத்துறை அதிரடி ரெய்டு!

மம்தா பானர்ஜி இதை கட்சியின் ஆவணங்கள் என்று கூறி எடுத்துச் சென்றார். ஆனால், அமலாக்கத்துறை இதை விசாரணைக்கான முக்கிய ஆதாரங்களை அகற்றியதாக குற்றம்சாட்டி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. இந்த சோதனை அரசியல் உள்நோக்கம் கொண்டது என்று மம்தா பானர்ஜி கடும் கண்டனம் தெரிவித்தார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், இன்று (ஜனவரி 9) டெல்லியில் திரிணமுல் காங்கிரஸ் எம்பிக்கள் மஹுவா மொய்த்ரா, டெரிக் ஓ பிரைன், சதாப்தி ராய், கீர்த்தி ஆசாத் உள்ளிட்டோர் அமித் ஷா அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தினர். "பெங்கால் மோடி-ஷாவின் அழுக்கு அரசியலை நிராகரிக்கிறது" என்ற பதாகைகளை ஏந்தி கோஷமிட்டனர்.

போராட்டம் தீவிரமடைந்ததால், டெல்லி போலீசார் தலையிட்டு எம்பிக்களை குண்டுக்கட்டாக தூக்கிச் சென்று கைது செய்தனர். இதில் மஹுவா மொய்த்ரா போலீசாரால் தூக்கிச் செல்லப்படும் காட்சிகள் வைரலாகி உள்ளன. கைது செய்யப்பட்ட பிறகு மஹுவா மொய்த்ரா கூறுகையில், "நாங்கள் பாஜகவை தோற்கடிப்போம். தேர்ந்தெடுக்கப்பட்ட எம்பியை டெல்லி போலீசார் எப்படி நடத்துகிறார்கள் என்பதை நாடே பார்த்துக் கொண்டிருக்கிறது" என்று கடுமையாக விமர்சித்தார்.

இந்த சம்பவம் மத்திய அரசுக்கும் மேற்கு வங்க அரசுக்கும் இடையிலான மோதலை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது. தேர்தல் நெருங்கும் நிலையில் மத்திய நிறுவனங்களை தவறாக பயன்படுத்துவதாக திரிணமுல் காங்கிரஸ் குற்றம்சாட்டி வருகிறது. இதற்கு பதிலடியாக அமலாக்கத்துறை சோதனை அரசியல் சார்பற்றது என்று விளக்கம் அளித்துள்ளது.

இதையும் படிங்க: பயங்கரவாதமே இல்லாத காஷ்மீர் தான் இலக்கு!! அதிகாரிகளுக்கு அமித்ஷா கொடுத்த அசைன்மெண்ட்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share