#BREAKING வெளுத்து வாங்கும் கனமழை... தமிழகத்தில் இந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை...!
சென்னை உள்ளிட்ட 13 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை உள்ளிட்ட 13 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வடகிழக்கு பருவமழை தீவிரமடைய இருக்கக்கூடிய நிலையில் வங்கக்கடலில் உருவாகி இருக்கக்கூடிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவழிந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறுவதற்கான வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. தமிழகத்தை பொறுத்தவரைக்கும் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரக்கூடிய சூழலில் 13 மாவட்டங்களில் அதிகன மழைக்கான வாய்ப்புகள் சொல்லப்பட்டிருந்தது. கனமழைக்கான வாய்ப்புகளும் சொல்லப்பட்டிருந்தது. ரெட் அலர்ட் மற்றும் ஆரஞ்சு அலட்டுகள் கொடுக்கப்பட்டிருந்தது. நல்லிரவில்லிருந்து விட்டு விட்டு மழை பெய்து வரக்கூடிய சூழலில் 13 மாவட்டங்களில் இருக்கக்கூடிய பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கி மாவட்ட நிர்வாகங்கள் உத்தரவை பிறப்பித்திருக்கிறது.
நேற்று முதலே மழை பெய்து வருவதன் காரணமாக தமிழகத்தில் 13 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை வழங்கப்பட்டிருக்கிறது. அந்த 13 மாவட்டங்களில் சென்னை, புதுக்கோட்டை ஆகிய இந்த இரண்டு மாவட்டங்களில் மட்டும் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு வெளியிட்டிருக்கிறார்கள். கனமழை காரணமாக மாவட்ட நிர்வாகங்கள் விடுமுறைகளை அறிவித்து வருகிறது.
இதையும் படிங்க: #BREAKING கனமழை எதிரொலி... இந்த 3 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை...!
அதிக கனமழை பெய்யக்கூடிய பகுதிகளில் மாணவர்கள் பள்ளிக்கு செல்ல முடியாத பகுதிகளாக இருக்கக்கூடிய சென்னை மற்றும் புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை கல்லூரிகள் வழக்கம் போல் இயங்கும் என சொல்லப்பட்டிருக்கிறது. அதேபோல செங்கல்பட்டு, திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், காஞ்சிபுரம் மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்திருக்கிறார்கள். ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சாவூர், சிவகங்கை ஆகிய மாவட்டங்களிலும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கி மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தாலும், சென்னைக்கு அருகே இருக்கக்கூடிய மாவட்டங்களான திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் போன்ற மாவட்டங்களுக்கெல்லாம் பள்ளி கல்லூரிகளுக்கான விடுமுறை வழங்கப்பட்டிருக்கிறது. அதிக கனமழைக்கான எச்சரிக்கை கொடுக்கப்பட்டிருந்த ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டிருக்கக்கூடிய மாவட்டங்களில் எல்லாம் ஓரளவிற்கு பள்ளி மற்றும் கல்லூரிகள் விடுமுறை என்பது அறிவிக்கப்பட்டிருக்கிறது.
மாணவர்கள் பாதுகாப்பற்ற முறையில் பள்ளிக்கு செல்ல வேண்டாம் என்பதற்காக அதிகாலையில் இந்த உத்தரவுகளை எல்லாம் வழங்க வேண்டும் என தமிழக சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. மாணவர்கள் யாரும் பள்ளிக்கு செல்ல வேண்டாம் எனவும் சொல்லப்பட்டிருக்கிறது. அதிக அளவிலான மழை பெய்யக்கூடிய பகுதியில் இருக்கக்கூடிய மாணவர்கள் பள்ளிக்கு செல்வதே முன்பாகவே தகவலை கேட்டு தெரிந்து கொண்டு அதன் பிறகாக செல்ல வேண்டும் என்கின்ற ஒரு தகவலும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. பள்ளியில் இருக்கக்கூடிய பள்ளி மேலாண்மை குழுக்கள் வாயிலாக இந்த தகவலை பள்ளியில் இருக்கக்கூடிய தலைமை ஆசிரியர்கள் அனுப்ப வேண்டும் எனவும் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு தகவலை உடனடியாக கொண்டு வேண்டும் என்கின்ற அறிவுறுத்தலும் மாவட்ட நிர்வாகம் சார்பில் வழங்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: “எக்காரணம் கொண்டும் இதை மட்டும் செஞ்சிடாதீங்க...” - தமிழக மக்களுக்கு வெளியானது முக்கிய எச்சரிக்கை...!