குடிநீரில் ஈ-கோலை பாக்டீரியா... இந்தியா முழுவதும் ரயில்வே பிறப்பித்த அதிரடி உத்தரவு...!
ஈக்கோலை பாக்டீரியா பரவல் எதிரொலியின் காரணமாக, நாடு முழுவதும் குடிநீரின் தரம் தொடர்பான ஆய்வுகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ஈக்கோலை பாக்டீரியா எதிரொலியால் தரமான குடிநீரை வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. ரயில் பயணிகளுக்கு பாதுகாப்பான குடிநீர் வழங்க ரயில்வே உறுதியளித்திருக்கிறது.
குடிநீரின் தரம் தொடர்பாக இந்திய கணக்காய்வாளர் மற்றும் தணிக்கையாளர் அறிக்கை வெளியிட்டதைத் தொடர்ந்து, பயணிகளுக்கு பாதுகாப்பான குடிநீரை வழங்கக்கூடிய வகையில் உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள ரயில்வே நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
அதன்படி, நாடு முழுவதும் இருக்கக்கூடிய ரயில் நிலையங்களில் குடிநீர் குளிரூட்டிகள் உள்ளிட்ட சுமார் 20 ஆயிரம் இடங்களில் ‘டேங்க் டு டாப்’ என்ற முறையில் புதிய நீர் வடிகட்டும் அமைப்பை நிறுவத் திட்டமிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: காவிரி சர்ச்சைக்கு நடுவே கபினியில் நீர் திறப்பு..!! தமிழகத்திற்கு நிம்மதி..!!
மேலும், பழைய குடிநீர் தொட்டிகளை மாற்றுதல், நீரின் தரத்தை மூலப்பகுதி மற்றும் விநியோகப் பகுதிகளில் தொடர்ந்து பரிசோதனை செய்தல், மையப்படுத்தப்பட்ட கண்காணிப்பு முறையை செயல்படுத்துதல் மற்றும் குடிநீர் சேமிப்புத் தொட்டிகளை குறிப்பிட்ட கால இடைவெளியில் சுத்தம் செய்து பராமரித்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
குடிநீரின் தரத்தை மேம்படுத்துவது மிக முக்கியமான பணியாகக் கருதப்படுவதால், இந்த முன்னேற்றத்தை ரயில்வே வாரியம் நேரடியாகக் கண்காணிக்கும் எனவும், குடிநீரின் தரம் குறித்த அறிக்கைகள் அவ்வப்போது வெளியிடப்படும் எனவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
எனவே, ரயில்வேயில் குடிநீரின் தரத்தை மேம்படுத்த அவசர நடவடிக்கையாக சுமார் 20 ஆயிரம் இடங்களில் ‘டேங்க் டு டாப்’ என்ற புதிய முறையில் புதிய நீர் வடிகட்டும் அமைப்பு நிறுவப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: மாணவர்கள் கொலை... தொடரும் கொடூரங்கள்..! பேரவையில் உதயநிதி ஸ்டாலின் தாக்கு..!!