×
 

இந்தோ-பசிபிக் பாதுகாப்பு மற்றும் கடல்சார் கூட்டணி! நியூசிலாந்து அமைச்சருடன் ஜெய்சங்கர் ஆலோசனை!

ஆசியான் மாநாட்டில் நியூசிலாந்து மற்றும் தாய்லாந்து வெளியுறவு அமைச்சர்களுடன் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார்.

ஆசியான் மாநாட்டில் பங்கேற்பதற்காக ஃபிலிப்பைன்ஸ் நாட்டின் மணிலா சென்றுள்ள இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கர், நியூசிலாந்து மற்றும் தாய்லாந்து நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர்களைச் சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து விரிவான ஆலோசனை நடத்தினார்.

நியூசிலாந்து துணைப் பிரதமரும் வெளியுறவுத் துறை அமைச்சருமான வின்ஸ்டன் பீட்டர்ஸை (Winston Peters) நேரில் சந்தித்தது குறித்து வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தனது 'எக்ஸ்' (X) தளத்தில் பதிவிட்டுள்ளதாவது. நியூசிலாந்து வெளியுறவுத் துறை அமைச்சர் வின்ஸ்டன் பீட்டர்ஸுடன் பயனுள்ள முறையில் சந்திப்பு அமைந்தது. இந்தோ-பசிபிக் பிராந்தியத்தின் பாதுகாப்புச் சூழல் குறித்த பார்வைகளைப் பகிர்ந்து கொண்டதோடு, இரு நாடுகளுக்கும் இடையிலான கடல்சார் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது குறித்தும் விரிவாக விவாதித்தோம்.

தொடர்ந்து, தாய்லாந்து நாட்டின் துணைப் பிரதமரும் வெளியுறவுத் துறை அமைச்சருமான சிஹாசக் புவாங்கெட்கியோவை (Sihasak Phuangketkeow) அமைச்சர் ஜெய்சங்கர் சந்தித்துப் பேசினார். இச்சந்திப்பின் போது, இந்தியா - தாய்லாந்து இடையிலான இருதரப்புத் தொடர்புகளை மேலும் ஆழப்படுத்துவது குறித்தும், மியான்மர் நாட்டில் நிலவி வரும் தற்போதைய அரசியல் மற்றும் பாதுகாப்பு முன்னேற்றங்கள் குறித்தும் இரு தலைவர்களும் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.

இதையும் படிங்க: சென்னை விமான நிலையத்தில் ரூ.4.5 கோடி போதைப்பொருள் பறிமுதல்! தாய்லாந்தில் இருந்து கடத்தி வந்த 2 பேர் கைது!

ஆசியான் கூட்டமைப்பின் பின்னணியில் நடைபெற்ற இந்த உயர்மட்டச் சந்திப்புகள், இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையை மேலும் வலுப்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாகத் தூதரக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படிங்க: அரசு பள்ளிகளில் RSS சாஹா பயிற்சியா? என்ன நடந்தது..? தமிழக அரசு விளக்கம்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share