எல்லாருக்கும் ஃபோன் வரும்... பயப்படாதீங்க..! பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவுறுத்தல்..!
எல்லோருக்கும் பேரிடர் கால உடனடி எச்சரிக்கை அழைப்பு இன்று செல்போன்களில் வரும் என்றும் பயப்பட வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்திய அரசு, பேரிடர் காலங்களில் மக்களுக்கு உடனடி எச்சரிக்கைகளை வழங்கும் நோக்கில், உள்நாட்டு தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட செல் ஒளிபரப்பு அடிப்படையிலான அவசர எச்சரிக்கை அமைப்பை நாடு முழுவதும் சோதனை செய்து வருகிறது. தொலைத்தொடர்பு துறை (DoT) மற்றும் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் (NDMA) இணைந்து மேற்கொள்ளும் இந்த சோதனை, பேரிடர்களான பூகம்பம், வெள்ளம், புயல் போன்ற அவசர நிலைகளில் மக்களுக்கு விரைவான தகவல்களை கொண்டுசேர்க்க உதவும்.
இந்த அமைப்பின் முக்கிய சிறப்பு என்னவென்றால், ஒரு குறிப்பிட்ட பகுதியில் உள்ள அனைத்து செல்போன்களுக்கும் ஒரே நேரத்தில் செய்தியை அனுப்பும் திறன். இது பாரம்பரிய SMS-ஐ விட வேகமானது மற்றும் இணைய இணைப்பு இல்லாமலும் செயல்படும். செல்போன் டவரின் வரம்புக்குள் இருக்கும் அனைத்து சாதனங்களுக்கும் எச்சரிக்கை சென்றடையும்.
சோதனை காலங்களில் இந்த செய்திகள் அதிக ஒலி (loud alert) உடன் வரும், இது பொதுமக்களை உஷார்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. தற்போது நடைபெறும் நாடு தழுவிய சோதனையின் போது, ஆங்கிலம், இந்தி மற்றும் பல்வேறு பிராந்திய மொழிகளில் இந்த எச்சரிக்கை வரும். ஒரு நபருக்கு பல முறை இந்த செய்தி வரக்கூடும். அதிக அதிர்வு சத்தத்துடன் வரும் இந்த அலர்ட்டைப் பார்த்து பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை என்று அதிகாரிகள் தெளிவுபடுத்தியுள்ளனர். எந்தவித நடவடிக்கையும் தேவையில்லை.
இதையும் படிங்க: தபால் ஓட்டை பிரிக்காமலே நிராகரிக்கலாம்!! இந்த 4 விஷயம் இருந்தால்!? தேர்தல் கமிஷன் அதிரடி உத்தரவு!
இது வெறும் சோதனை மட்டுமே. இந்த தொழில்நுட்பத்தை C-DOT உருவாக்கியுள்ளது. இதன் மூலம் எதிர்காலத்தில் பேரிடர் எச்சரிக்கைகள் மிக விரைவாகவும், பரந்த அளவிலும், நம்பகத்தன்மையுடனும் கொண்டுசேர்க்க முடியும். முன்பு SMS அடிப்படையிலான எச்சரிக்கைகள் பயன்படுத்தப்பட்டாலும், Cell Broadcast தொழில்நுட்பம் மிகவும் பயனுள்ளதாகக் கருதப்படுகிறது. இன்று காலை 11.15 முதல் 12.15 மணிக்குள்ளாக இந்த அழைப்பு வரலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: விஜய்க்கு 41% ஓட்டு இருக்கு! தவெக 121 இடங்களை கைப்பற்றும்! முன்னாள் ஐபிஎஸ் ரவி & குழு நடத்திய கருத்துக்கணிப்பு!