இந்தியாவின் 101வது ராக்கெட்.. இத்தனை ஏற்பாடுகளுக்கு மத்தியில் தோற்றது எப்படி?
விண்ணில் பாய்ந்த சில நிமிடங்களில் பி.எஸ்.எல்.வி. சி-61 ராக்கெட் தோல்வியடைந்தது. இதனால், இ.ஒ.எஸ்-09 செயற்கைக்கோளை திட்டமிட்ட இலக்கில் நிலைநிறுத்த முடியாமல் திட்டம் தோல்வி அடைந்தது.
காஷ்மீரின் பஹல்காமில் ஏப்ரல் 22-ல் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் 26 போ் கொல்லப்பட்டனா். இதற்கு பதிலடியாக ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கை மூலம் இந்திய விமானப் படை, பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது குண்டுகளை வீசி அழித்தது. இதைத் தொடா்ந்து பாகிஸ்தான் தரப்பு ஜம்மு-காஷ்மீா், பஞ்சாப், குஜராத், ராஜஸ்தான் ஆகிய எல்லையோர மாநிலங்களைக் குறிவைத்து ஏவுகணைகள், ட்ரோன்களை ஏவியது.
ஆனால், இந்திய ராணுவத்தின் வான் பாதுகாப்பு அமைப்புகள் அவற்றை வெற்றிகரமாக முறியடித்தன. பதிலடியாக பாகிஸ்தான் விமானதளம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் துல்லிய ஏவுகணைத் தாக்குதலையும் இந்தியா நடத்தியது. உச்சகட்ட பதற்றத்துக்கு இடையே பேச்சுவார்த்தை மூலம் கடந்த சனிக்கிழமை உடனடி சண்டை நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டது.
இதையும் படிங்க: நாளை கிளம்புகிறது பிஎஸ்எல்வி-சி61 ராக்கெட்.. இன்று தொடங்கியது கவுண்டவுன்..!
தற்போது சண்டை நிறுத்தம் காரணமாக எல்லையில் அமைதி திரும்பியுள்ளது. ஆனாலும், இந்த சண்டை நிறுத்தம் தற்காலிகமானதே. பாகிஸ்தானின் செயல்பாடுகளைப் பொருத்தே அதன் எதிா்காலம் இருக்கும் என்று பிரதமர் மோடி தெரிவித்து உள்ளார். எனவே எல்லையில் தொடர்ந்து பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.
இந்த நிலையில், பாகிஸ்தான் மற்றும் சீன எல்லைகளை கண்காணிக்கும் வகையில் இஸ்ரோ உருவாக்கியுள்ள ரிசாட்-1பி ரேடார் இமேஜிங் செயற்கைக்கோள், ஸ்ரீஹரிகோட்டாவின் சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து இன்று காலை 5.59 மணியவில் பிஎஸ்எல்வி- சி 61 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்டது. இந்த ராக்கெட்டில் 1,696.24 கிலோ எடை கொண்ட இ.ஒ.எஸ்-09 என்ற செயற்கைக்கோள் பொருத்தப்பட்டிருந்தது. இது அதிநவீன பூமி கண்காணிப்பு செயற்கைக்கோளாகும். அனைத்து கால நிலைகளிலும் துல்லியமாக படங்களை எடுக்கும் திறன் கொண்டது.
ஆனால், விண்ணில் பாய்ந்த சில நிமிடங்களில் பி.எஸ்.எல்.வி. சி-61 ராக்கெட் தோல்வியடைந்தது. இதனால், இ.ஒ.எஸ்-09 செயற்கைக்கோளை திட்டமிட்ட இலக்கில் நிலைநிறுத்த முடியாமல் திட்டம் தோல்வியடைந்தது. இந்நிலையில், பி.எஸ்.எல்.வி. சி-61 ராக்கெட் தோல்வியடைந்தது குறித்து இஸ்ரோ தலைவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், பி.எஸ்.எல்.வி. சி-61 ராக்கெட் ஏவப்பட்டு 2 கட்டங்கள் வெற்றியடைந்த நிலையில் 3வது கட்டத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதனால் ராக்கெட் அதன் இலக்கை அடையாமல் தோல்வியடைந்தது. இது குறித்து முழுமையாக ஆய்வு மற்றும் விசாரணையை மேற்கொண்டு நாங்கள் மீண்டு வருவோம்' என்றார்.
இதையும் படிங்க: 63வது ஆண்டில் 63வது ராக்கெட் லாஞ்ச்.. நாசாவுடன் இணைந்து இஸ்ரோ போடும் மாஸ்டர் ப்ளான்..!