ஜெயலலிதா பிறந்தநாள்... களைகட்டிய அதிமுக அலுவலகம்..! ஜெ. திருவுருவச் சிலைக்கு இபிஎஸ் மரியாதை..!!
ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது திருவுருவச்சுளைக்கு இபிஎஸ் மரியாதை செலுத்தினார்.
மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதாவின் 78-வது பிறந்தநாள் இன்று தமிழகம் முழுவதும் மிகுந்த உற்சாகத்துடனும் உணர்ச்சிப் பெருக்குடனும் கொண்டாடப்பட்டு வருகிறது. அவரை 'அம்மா' என்று அன்போடு அழைத்து போற்றிய மக்களும், அதிமுக தொண்டர்களும், கட்சி நிர்வாகிகளும் இந்த நாளை சிறப்பு நிகழ்ச்சிகளுடன் நினைவுகூர்ந்து வருகின்றனர். அரசியல் கட்சியினரும் ஜெயலலிதாவிற்கு புகழஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகமான எம்.ஜி.ஆர் மாளிகையில் காலை முதலே விழாக்கோலம் தெரிந்தது. ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு காலை முதலே கட்சி அலுவலகத்திற்கு தொண்டர்கள் படையெடுத்து வந்தனர். புரட்சித்தலைவி அம்மா ஜெயலலிதாவின் 78-வது பிறந்தநாள் இன்று உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது.
சென்னை ராயப்பேட்டையில் அமைந்துள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில், கட்சியின் பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் காலை 10.30 மணியளவில் வருகை தந்தார். அங்கு கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் உற்சாகமான வரவேற்பு அளித்தனர். எடப்பாடி பழனிசாமி முதலில் தலைமை அலுவலக வளாகத்தில் உள்ள எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் திருஉருவச் சிலைகளுக்கு மரியாதை செலுத்தி இருக்கிறார்.
இதையும் படிங்க: காவிச் சிந்தனையில் பழனிச்சாமி... வள்ளுவர் எப்படிப்பட்டவர் தெரியுமா? கிழித்து தொங்கவிட்ட செல்வப் பெருந்தகை..!
அங்கு அவர் மாலை அணிவித்து, மலர்கள் தூவி மரியாதை செலுத்தினார். இதேபோல், மாநிலம் முழுவதும் அதிமுக தொண்டர்கள் ஜெயலலிதாவின் புகைப்படங்களுக்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினர். பொதுமக்களுக்கு உணவு, இனிப்புகள் வழங்கி உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர்.
இதையும் படிங்க: முழு சங்பரிவார் சேவகராக மாறிய EPS... அவ்ளோ விசுவாசம்..! பந்தாடிய கனிமொழி..!!